freelancing writer

My photo
Am Freelance in any Area !

Saturday, July 3, 2021

வலிகள் ஆறிவிடும் ஆனால் வடுக்கள் ? : மாடத்தி ஒரு பார்வை



மாதவிடாயில் ரத்தம் தோய்ந்த துணிகளையும் இறுதிச் சடங்கின்போது பிணங்களுக்குப் போர்த்தப்படும் துணிகளையும் துவைத்துத் தருவதற்காகவே கிராமத்தில் ஊருக்கு ஓரமாய் குடியமர்த்தப்பட்டவர்கள் சுடலை மற்றும் வேணி அவரது மகள் யோசனா. 

தீட்டு துணிகளை துவைப்பது மட்டுமல்ல, குடியானவர்களின் கண்ணிலும் படாமல் வாழவேண்டும். 

ஊர் ஆண்களின் காம பசிக்கு பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள் யோசனாவின் தாய். அதானலே யோசனாவின் சுதந்திர போக்கை கட்டுப்படுத்தி வளர்க்கிறாள். ஆனால் அம்மாவின் அடிமை சங்கிலியை உடைத்து சுதந்திரமாக மலை காடுகளில் சுற்றி திரிகிறாள் யோசனா.

இவர்களுக்கு என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 


படம் நேரடியாக யோசனாவையும், அவள் குடும்பத்தையும் பற்றி பேசாமல் ஒரு narration Format ல் பேசியது. மிக சிறப்பு. வெறுமனே கதை சொல்லாமல் அந்த கதைக்கும் யோசனாவின் கதைக்குமே தொடர்பு வைத்து சொல்வதனால் இந்த படம் மனதில் ஒன்றியே இருக்கும். 


இப்படி புதிரை சமூகம் என்று பிரித்தாண்டாலும் அவர்களுக்கும் ஒரு எஜமான் இருக்கிறான். எஜமானுக்கும் ஒரு ஆண்டை இருக்கிறான்.‌ ஆண்டைக்கும் ஒரு பார்ப்பான் இருக்கிறான்‌ என்று அவர்களின் பிரித்தாளும் குணங்களையும், 


'நானும் ஒரு அடிமைதான் அதில் எனக்கு அவமானம் இல்லை. எனக்கு ஒரு அடிமை உண்டு அதனால் எனக்கு பெருமை' என்ற கூற்றே இந்த படத்தில் 
பல இடங்களில் காட்சிபடுத்தியிருக்கிறார்கள். 
 

சாதிய படிநிலைகளில் நடக்கும் அவலம் ஏராளம். அதில் பாலியல் வன்கொடுமை இந்தியாவில் படித்தவையும் கேட்டவையும் பார்த்தவைகளும் அதிகம். இந்த சாதிய படிநிலைகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை உணர்த்தும் படம் தான் மாடத்தி. 

திருநெல்வேலியை சுற்றி இருக்கும் கிராம மக்களிடம் உரையாடி புதிரை வண்ணார் சமூகத்தின் நிலையை கருவாக வைத்திருக்கிறார் இயக்குனர் லீனா மணிமேகலை. படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு பாராட்டக் கூடியது குறிப்பாக வேணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த செம்மலர். 

இந்த ஊர் காடு மலைகளுக்கு இளவரசியாக யோசனாவை அவ்வளவு அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.‌ நிறைய இடங்களில் வரும் காட்சிகள் பெரிய திரையில் பார்ப்பதற்கு இன்னமும் அழகாக இருக்கும். 

கார்த்திக் ராஜாவின் பிண்ணனி இசை மேலும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சாதி மதம் எது இருந்தாலுப் பதின்பருவத்தில் வரும் ஈர்ப்பு, பெண் விடுதலை, வழிபாட்டு அரசியலை அழகாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

Crowd Fun மூலம் Independent Film maker லீனா பெயரில் இந்த படம் உருவாகி உள்ளது. குறைந்த செலவு தான். . 

புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் பட்டதாரியாக வந்து தாசில்தாராக பணியாற்றிய மூர்த்தி படத்தின் திரைக்கதையையும் வசனங்களையும் மெருகேற்றிருக்கிறார். மேலும் திரைக்கதை கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ரஃபிக் இஸ்மாயில் இணைந்து எழுதி இருக்கிறார்கள். 



இன்றைய காலகட்டத்தில் சாதிய படிநிலைகளில் நடக்கும் தீண்டாமை குற்றங்களை ஆவணப்படுத்தப்படுத்துவதும் படங்களாக வெளியிடுவதும் வரவேற்கதக்கது.‌ 

வலிகள் ஆறிவிடும். வடுக்கள்?? 

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...