காற்றை கிழித்து வரும் பூச்சிகளின் ஓசை!
தூசு தும்பு படியேறி பயணித்து
பச்சை கசக்கி மூக்கில் ஏறி
சித்தம் இடித்து போனது
வாஞ்சை கொண்ட என் கால்கள்
அன்று பாதணிகளை கழட்டி நடக்க ஆரம்பித்தது.
நண்பனுக்கு கடித்த அட்டைப்பூச்சி பற்றியும் கவலைபடவில்லை என் கால்கள்,
காப்பி தோட்ட சில்லை
விழுந்து கிடந்த இடமெல்லாம் ஆர்வமும் எழுந்தது.
தூரத்தில் காட்டப்படும் பறவைக்கெல்லாம் தெரியாது.
நானும் வேறு மாநில பறவை என்று
ஒருவேளை தெரிந்திருக்கக் கூடுமோ?
அதனாலே என் பார்வையிலிருந்து பறந்தன.
சுற்றி திரியும் ஓசைகளை கூட்டி இழுத்து
போற்றி வைத்தது காற்று.
அடடா தவறவிட்டோமே என எண்ணி நகைத்து மீண்டும் பயணிக்கிறேன்
இயந்திர சப்தங்களை கேட்க!
- விஜய் தேசிங்

No comments:
Post a Comment