ஒருபுறம் சாமி கும்பிடமா போனதால தான் இவ்வளவு கம்மி மார்க் என்று ஆயா புலம்பினாள்.
முருகன் அழுகைக்கு காரணம் உறவினர் மட்டுமல்ல அங்கு கூடியிருந்த பக்கத்து வீட்டு ராமதாஸ் அங்கிள் ம் தான்.
அவரது மகன் கான்வென்ட் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து இப்போது ஃபெயில் ஆகி விட்டான்.
அப்பாவின் பெல்ட் அடிக்கு பயந்து பாட்டி வீட்டுக்கு ஓடியவன் மாலை 6 மணி ஆனது. இன்னும் வீடு திரும்பவில்லை.
ஜெயமுருகன் சிரித்தால் அவன் நண்பன் ராஜேஷ் க்கு 2 அடி சேர்ந்து விழும் என்பாதாலே அழுகை நின்றபாடில்லை.
கூட்டம் கலைந்தது. வீம்புக்கு சாப்பிடமால் அழுதபடியே உறங்கினான் முருகன். இருந்தாலும் அம்மாவுக்கு மனது கிடந்து தவிக்க, எல்லோரும் தூங்கியவுடன் தன் மகனை தட்டி எழுப்பி தட்டு சோற்றை பிசைந்து கொண்டே ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்தால்.
நிறைய பேர் பாஸ் ஆனதே பெரிய விஷயம் னு சொல்றாங்க டா, எதோ சமச்சீர் கல்வி வேறவாம். அதனால தான் பசங்க நிறைய பேர் மார்க் குறைஞ்சு போயிருச்சுனு ஜானகி மவ சொல்லிட்டு இருந்தா.. அதானால நீ ஒன்னும் வருத்தப்படாத 12 - ல நல்ல மார்க் வாங்கிடலாம்.
முருகனுக்கு மட்டும்தான் தெரியும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முன்பு தியேட்டருக்கும் பீச்- சிற்கும் சுற்றி கொண்டு இருந்தது.
ஆனால் ஒன்னு நிச்சயம் முருகன் மார்க் குறைஞ்சது சமச்சீர் னால இல்ல.. பாட்டி சொன்னா மாதிரி சாமி கும்புடாம போனதாலையும் இல்ல..
படிக்காம போனதால தான் இவ்வளவு கூத்தும்.
இரவு 11 மணி.. ராஜேஷ் வீட்டில் பெல்ட் சத்தம் சுளீர் சுளீர் னு கேட்டுட்டு இருந்தது.
- விஜய் தேசிங்
மின்னஞ்சல் : vijaydesing555@gmail.com

No comments:
Post a Comment