வீட்டு வேலைக்காரியான திலகத்தை (ஷோபா) அந்த வீட்டின் உரிமையாளரான வெங்கடாசலம் (சந்திரபாபு) ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறார். வீட்டையே கட்டி ஆளும் தன் தங்கை இந்துமதிக்கு (சுமித்ரா) தெரிந்து விடும், இந்த சமூகத்திற்கு தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று பயந்து இன்னொரு வேலைக்காரன் (செவிடன்) மீது பழி போடுகிறான்.
இந்த கர்ப்பத்திற்கு காரணம் தன் நண்பன் வெங்கட் தான் என்று தெரிந்து கொண்டு திலகத்திற்கு உதவுகிறார் வெங்கட் - ன் நண்பர் சஞ்சீவி (கமல் ஹாசன்)
இதற்கிடையே இந்துமதிக்கும் சஞ்சீவிக்கும் இடையேயான இடது வலது காதல் கதை. பழியை சுமக்கும் அப்பாவி செவிடன் கதை.
இறுதியில் இவர்களின் உறவுகளில் என்னென்ன மாறுதல்கள் நடந்தது என்பது தான் மீதிக்கதை.
படத்தில் கம்யூனிஸ்ட் தோழராக கமல் ஹாசன் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் பிரமாதம்.கமல் இதில் எல்லா காட்சிகளிலுமே சிகரெட்டுடன் தான் இருப்பார். கூடவே வறட்டு இருமலையும் அழகாக வசனத்தினூடே பயன்படுத்திருப்பார். கே.பி யும் கமல் ம் சேர்ந்தால் கிடைக்கும் அழகியல் அது. 16 வயதினிலே போல ஒரு கதைக்களம் என்றாலும் கே.பி க்கே உரித்தான சாயல் இந்த படத்தில் காணலாம்.
அந்த காலக்கட்டத்தில் வந்த படம் என்றாலும் நிறைய இடங்களில் முற்போக்குதனம் இருந்தது.
ஒரு பெண் இறுதி காட்சியில் சுயமாக ஒரு முடிவை எடுத்து முற்போக்கு தனத்தை காட்டி பார்வையாளர்களின் கைத்தட்டலை வாங்குகிறாள். அதே நேரத்தில் இந்துமதி கதாபாத்திரம் சுயமாக சிந்தித்து நடந்ததினால் அதற்கு பெயர் அகம்பாவம். அவள் பெட்டி பாம்பாய் சஞ்சீவியுடன் சென்றதற்கும் பார்வையாளர்களிடம் கைதட்டல் வாங்குகிறாள். படத்தில் இதுபோல சில சில இடங்களில் பிற்போக்கு தனமும் இருந்தது. அதெப்டி வாத்தியார் னால ரெண்டு கருத்துக்களை கொடுத்து கைத்தட்டல் வாங்க முடியுது னு தெரில..
16 வயதினிலே படம் பார்த்து பாரதிராஜா வை நெகிழ்ந்து பாராட்டிய கே.பாலசந்தர். அதே பாணியில் அவருடைய கருத்துக்களை இடைசெருகி கொடுத்த படம் தான் நிழல் நிஜமாகிறது. கலர் திரைப்படமான 16 வயதினிலே படத்திற்கு பிறகு கருப்பு வெள்ளையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது.

No comments:
Post a Comment