freelancing writer

My photo
Am Freelance in any Area !

Monday, April 13, 2020

இறப்பதற்குள் பார்க்க வேண்டிய படம் - ஈரானிய இயக்குனர். மஜீத் மஜிதி




இன்று வெளிவரும் படங்களில் குழந்தைகளின் உணர்வுகளையும் அவர்கள் பார்வையில் சமூகம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி சில படங்களே வந்துள்ளது. அந்த வகையில் எனக்கு இன்னும் மனதில் இருக்கும் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க , ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள், மணிரத்தினம் அவர்களின் அஞ்சலி மற்றும் சில
இப்படி சொல்லி கொண்டு போகலாம். இந்த உணர்வுகளை மேல் நாட்டு படங்கள் எப்போதாவது மட்டுமே தந்து செல்கின்றன. பெரும்பாலும் அனிமேஷன் வகையில் குழந்தைகளின் மனநிலையை சொல்லும் கதையை படமாக எடுத்து விட்டு செல்வார்.

(சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த ஜோஜோ ராபிட் திரைப்படம் ஒரு வரலாற்று ரீதியான பல தகவல்களை ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து சொல்லியது என் மனதில் நெருக்கமானவையாக இருந்தது)

இப்படி குழந்தைகளுக்கும் ஒரு உலகம் அதில் யார் வில்லன் யார் ஹீரோ யார் குணசித்திர நடிகர் என்பது அவர்களுக்கு மட்டும் தெரிந்தது.
ஆனால் ஒரு அதிசயம் அந்த ரகசியங்கள் இன்னொருவருக்கும் தெரிந்திருக்கிறது. அவர் அதில் கெட்டிக்காரர், குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பல அறிவுரைகளை சொல்லி கொண்டு இருப்பவர். சொல்லப் போனால் குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்கு அறிவுரை கூற வைக்கும், நம்ம ஊரு சமுத்திரகனி அண்ணன் போல, அவர் இயக்கிய ‘CHILDREN OF HEAVEN’ என்ற படத்தை பற்றியே இந்த கட்டுரை.


மஜீத் மஜிதி, இவர் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தில் மகனாக பிறந்தார், பள்ளிபருவத்திலே தந்தையை இறந்ததால் இவரை வறுமை  வாட்டி எடுத்தது. பின் குடும்ப பாரம் சிறு வயதிலே தன் தலை மேல் விழுந்தது. கடுமையாக உழைத்தார் மஜீத் மஜிதி. படிப்பின் மீது  இருந்த ஆர்வத்தினால் அவர் பள்ளிக்கூடம் நேரம் முடிந்ததும், இனிப்பு பண்டங்கள், ஐஸ் க்ரீம் விற்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஐஸ் க்ரீம் வியாபாரமும் படுத்து போக, 14 வயதில் நாடக குழுக்களுடன் இணைந்து மேடை ஏறி நடிக்க தொடங்கினார். இந்த முடிவும் வறுமை எடுத்தது தான்.
பின் நாடகத்தில் ஈர்ப்பு வர தொடங்கியது, அதை முழுமையாக கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாடக கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து பட்டமும் பெற்றார். பின் ஈரானில் கால மாற்றத்தாலும், அரசியல் புரட்சியினாலும் சினிமா வளர ஆரம்பித்தது, அதனால் மஜீத் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடிக்க சென்று விட்டார்.
அப்படி நடித்த படங்களில் ஒன்று தான், ‘பாய்காட் இது ஈரானில் தலை சிறந்த இயக்குனர் ஆனா மொசான் மேக்பல்பப்பின் இயக்கத்தில் வெளியான படம் என்பது குறிப்பிட தக்கது.


(மொசான் மேக் பல்ப்பின் கட்டுரை முன்பு பதிவு செய்துள்ளேன். நேரமிருப்பின் தவறாமல் அதையும் படியுங்கள்)

நடிப்பு மட்டும் மஜீத் க்கு தீனி போட வில்லை, நேரம் கிடைக்கும் போது குறும்படங்கள், ஆவணப்படங்கள் என இவரே இயக்கி வெளியிட்டு வந்தார். பின் 1992 ல் ‘பாதக் (BADAK) என்ற முழுநீளத் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். அதன் பின் பல திரைப்படங்கள் எடுத்தார். அதில் மிக சிறந்த படமாக இன்று வரை குறிப்பிடப்படும் படமாக 1997 ல் வெளியான ‘CHILDREN OF HEAVEN’ என்ற குழந்தைகள் கதைக்களம் கொண்ட படம் தான்.
இந்த படம் அலி என்ற அண்ணன், சாரா என்ற தங்கை என்ற இருவரை சுற்றி அமைந்த கதைக் கரு கொண்டது. இந்த படம் பல நாடுகளில் பல திரைப்பட ஆவலர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். இது மஜீத் ன் தனித்துவமான திறமையை வெளி கொண்டு வந்தது. இந்த படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. இவை ஆஸ்கார் வாங்கவில்லை என்றாலும் முதன் முதலில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.


நீங்கள் இறப்பதற்குள் ஒரு சில படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று உலக சினிமா விமர்சகர்களிடம் கேட்டால் அவர் பரிந்துரை செய்யப்படும் 10 படங்களில் ஒன்றாக ‘CHILDREN OF HEAVEN’ இருக்கும்.


இது போன்ற படங்களை பார்ப்பதினால் ஒரு நல்ல விமர்சகர் ஆகிறோமோ இல்லையோ ஒரு நல்ல ரசிகனாக மாறலாம். என்னையும் ஒரு ரசிகனாக மாற்றிய மஜீத் மஜிதி அவர்களை நினைவுகோருவோம்.



- விஜய் தேசிங்
9884112420
vijaydesing555@gmail.com

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...