freelancing writer

My photo
Am Freelance in any Area !

Sunday, April 12, 2020

நான் கறுப்பின பெண் அதனால் என்ன? - ஊடக அரசி. ஒப்ரா வின்ப்ரே





ஏன் இப்போது இந்த கறுப்பின பெண்ணை பற்றி படிக்க வேண்டும். வரலாற்றில் இடம் பெரும் அளவு இந்த பெண் அப்படி என்ன செய்துள்ளார்?
.
.
திருமணமாகாத கறுப்பின இளம் பெண்ணின் மகளாக 1954 ல் அமெரிக்காவில் பிறந்தவர் ஒப்ரா வின்பிரே,
தாயின் நடத்தை சரியில்லாததால் தன் பாட்டியின் வளர்ப்பில் வளர நேரிட்டது. குழந்தையாக இருக்கும்போதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவகாரத்து,அதனால் அப்பாவிடம் சிறிது நாள், அம்மாவிடம் சிறிது நாள் என வாழ்க்கை பந்தாடியது இவளை.
சிறு வயதில் வறுமை, அந்த சூழ்நிலையிலும் தன் 9 வயதில் உறவினர் ஒருவரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.

அதன் பின் 14 வயதில் திருமணம் ஆகமால் தன் நண்பன் ஒருவனால் குழந்தை பெற்றார். அந்த குழந்தையும் ஒரு சூழ்நிலையில் பறிகொடுத்தார். ஒரு நாள் அம்மாவின் நடத்தை சகிக்க முடியாமல் 200 டாலர்கள் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஓடினார். அதன் பின் தன் அப்பாவிடம் இருந்தே படிக்க தொடங்கினார்.
ஒரு புறம் வறுமை மறுபுறம் உளவியல் ரீதியான ஏற்ற தாழ்வு, இன்னொரு புறம் பாலியல் கொடுமைகள் இதனிடையே ஒப்ரா பலரால் பேசப்பட்டார்.
ஆம், ஒப்ரா சிறந்த பேச்சாளர், சிறு வயதில் இருந்தே பேச்சு திறமையில் தன் ஊரிலும், தான் படித்த பள்ளி கூடத்திலும் பேச்சாளராக வலம் வந்தவர், சிறு வயதில் பேச ஆள் இல்லாமல் பறவை, விலங்கு, கரப்பான் பூச்சியிடமும் பேசி  வளர்ந்தவர், இவர் பேச்சு, பள்ளி கூடத்தில் பல பரிசுகளை பெற்று தந்தது.
எப்படி பேச்சில் திறமை வாய்ந்தவராய் திகழ்ந்தாரோ, அதே போல் படிப்பிலும் ஆர்வம் உள்ளவராய் திகழ்ந்தார். இதுவரை, நிறத்தாலும், இடத்தாலும், இனத்தாலும், ஏழ்மையினாலும் பல இடங்களில் அவமானத்தை சந்தித்த ஒப்ரா, இதனை படிப்பால் மட்டுமே ஈடு செய்ய முடியும் என்று நம்பி படிப்பை முன் நிறுத்தி தீவிரமாக படிக்க ஆரம்பித்தார்.
பள்ளி காலத்திலே பேச்சு திறமையால் ஒரு வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக சேர்ந்தார், வாரம் 100 டாலர் சம்பளம் அவரது வறுமையை போக்கி வாழ்க்கையை நகர்த்த உதவியது.  

அந்த காலத்தில் கறுப்பின மக்கள் பொருளாதாரத்திலும், சமூக இடத்திலும் ஏழ்மைகள், அதனால் பள்ளி படிப்பை தாண்டுவதே அரிதாக பார்க்கப்பட்ட வேளையில், டென்னசி மாநில கல்லூரியில் சேர்ந்தார். அதே வேளையில் கல்வி செலவுக்காக சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார், அதன் மூலம் மேடை பயத்தை போக்கி கொண்டார். அது காலப்போக்கில் நடிப்பு திறமையும் வெளி கொண்டு வர ஒரு ஊக்கி யாக இருந்தது.

1972 ம் ஆண்டில் டென்னசி மாநில அழகியாக தேர்வு பெற்றார். பின் 1973 ல் உள்ளூர் தொலைக்கட்சியில் துணை செய்தி வாசிப்பாளரக சேர்ந்தார்.
ஒரு கட்டத்தில் இவரது முட்டை கண், சப்பை மூக்கு, கருப்பு நிறம் விமர்சனமாக பேசப்பட்டு சில சிகிச்சையும் செய்ய தொடங்கினார், இதனால் இவருக்கு முடி கொட்ட தொடங்கியது. பின் 1984 ல் ஏ.எம் சிக்காக்கோ வில் சேர்ந்தார். பொதுவாகவே அந்த காலத்தில் சிக்காக்கோ நிறவெறிக்கு பேர் போன ஊர், ஆனால் ஒப்ரா வின் நிகழ்ச்சி அந்த நிறவெறியை கடந்து வெற்றி பெற்றது.

பின் ஒப்ரா வின் வாழ்வில் நினைத்து பார்க்க கூட முடியாத வாய்ப்பு அவர் வீட்டு கதவை தட்டியது. புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ன்
‘தி கலர் பர்பிள்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு இவரை தேடி வந்தது. அந்த படத்தில் நடித்ததற்கு ஆஸ்கார் சிறந்த துணை நடிகை என்ற பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டார். பின் ஹார்ப்போ புரொடக்ஷன் தொடங்கி தானே நிகழ்சிகளை வர்த்தகம் செய்தார்.
பின் இவரது நிகழ்சிகளில் குழந்தை பாலியல் கொடுமை குறித்து பேச தொடங்கினார். தான் அனுபவித்த இன்னல்களை மேற்குறியிட்டு சில தகவல்களை தான் நிகழ்சிகளில் வெளியிட்டு சட்டம் மாறுதல்களை கொண்டு வந்தார். பின் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்த சட்டத்திற்கு ‘ஒப்ரா சட்டம் என்று பெயர் வந்தது.
இவரது ‘ஓப்ராவின்ப்ரே ஷோ’ உரையாடல் நிகழ்ச்சி 132 நாடுகளில் ஒலிஒளி பரப்பப்பட்டது. இவரின் உச்சரிப்பு இவரை உச்சிக்கு கொண்டு சென்றது,
                      
“நான் ஒரு மாத சம்பளம் வாங்கும் பெண்ணாக இருக்க மாட்டேன் நானே ஒரு தயாரிப்பாளராக வளர்வேன்
என்ற ஒப்ராவின் வார்த்தை படி இன்று உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும், கறுப்பின மக்களில் இன்று பெரும் புள்ளியாக இருக்கிறார். அன்று வறுமையில் வாடிய அதே ஒப்ரா ஒரு புகழ்பெற்ற நட்சத்திரம் என்பதை தாண்டி தர்ம தேவதையாக இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறார். தான் சேகரித்த சொத்துக்களை கறுப்பின குழந்தைகள் படிப்பிற்கும், எய்ட்ஸ் நோயாளி மருத்துவ செலவிற்கும், பேரிடர் காலங்களில் நிவாரணம் அளித்தும் பொது சேவை செய்து வருகிறார்.

சாதாரணமாக சாலை ஓரம் வறுமையில் வாடிய ஒப்ரா, இன்று சாலைகளில் பசிக்காக கையேந்து நிலையை எதிர்த்து சேவை செய்து வருகிறார். ஊடகத்தில் மட்டுமல்ல உலகத்திலும் மிகப்பெரிய ஆளுமையாக ஒப்ரா திகழ்கிறார்.
‘தான் ஒரு சப்பை மூக்கு, முட்டை கண்ணு கொண்ட கறுப்பின பெண், அதனால் என்ன?” என்று இன்று பெருமையாக சொல்லி கொள்கிறார். 
இந்த நேரத்தில் நாம் ஒப்ராவின்ப்ரே வை நினைவுகோருவோம்.







நன்றி !
விஜய் தேசிங்
9884112420
vijaydesing555@gmail.com


No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...