- Mohsan Makhmalbaf
உலக சினிமாவில் தலை சிறந்த இயக்குனராக கொண்டாடப்பட வேண்டிய
மற்றொரு இயக்குனர், மோசன் மக்மால்பஃப்.
ஆம், உலக சினிமா வரலாற்றை
புரட்டி பார்த்தால் மொசான் மேக்பல்பப் பற்றி ஒரு பக்கமாவது கட்டுரை
இருந்திருக்கும்.
ஈரான் நாட்டில் பிறந்த இவர் சிறு வயதிலே வறுமையின் பிடியில்
சிக்கியவர். அதன் காரணமாக கல்வியை இழந்து கூலி
வேலை செய்து வந்தார். ஐஸ் க்ரீம் விற்பது, சுமை தூக்குவது, மெக்கானிக்
வேலை செய்வது என்று தன் இளமை காலமும் இப்படியே நகர்ந்தது.
தனது 17 வயதில் ஒரு சூழ்ச்சியில் சிக்கி ஈரான் அரசிற்கு
எதிராக செயல்பட்டவர் என்று கைது செய்யப்பட்டார். சிறையில் காவலர்களால் சித்ரவதை
அனுபவித்தார். அந்த இன்னல்களையும் தாண்டி தன் சிறைக் காலங்களை கவிதை, கதைகள் எழுதி
கடந்து வந்தார். சிறையில் எழுதிய கவிதையும் கதையும் அவரை எழுத்தாளராக மாற்றியது.
குழந்தை பருவத்தில் வறுமை, இளமை பருவத்தில் சிறைச்சாலை சித்ரவதைகள் என்று இருந்த மொசான் மேக்பல்பப் தன்
இருபத்தி நான்கு வயது வரை சினிமாவையே பார்த்தது இல்லை. சிறையில் இருந்து வந்த மொசான்
மேக்பல்பப் ஒரு எழுத்தாளராக தன் வேலைகளை செய்து வறுமையில் இருந்து தப்பித்தார்.
பின் திரைப்படங்களின் மீது ஆர்வம் எழுந்து ஒரு திரைப்படம் விடாமல் பார்த்து
சினிமாவையும் கற்று கொண்டார். பின் ஒரு எழுத்தாளராகவும் சினிமாவை பார்த்து கற்று
ஒரு இயக்குனராகவும் வளர்ந்தார்.
அதன் பின் சில படங்கள் இயக்கினார். இவர் இயக்கிய ‘moment of innocence’ , ‘kandahar’ . ‘the silence’ போன்ற
திரைப்படங்கள் எடுத்து உலக திரைப்பட ரசிகர்களை தன் பால் இழுத்து விருதுகளை
குவித்தார்.
தான் மட்டும் திரைப்படம் கற்று கொண்டால் போதாது என் வழி
பிறரும் சினிமாவை கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் மனைவி மகள்கள் உட்பட
பிறருக்கும் சினிமா கற்று தர தன் வீட்டிலே ஒரு திரைப்பட பள்ளி துவங்கினார். அதில் படித்த தன் மகளான ‘ஹானா’ தன் எட்டு வயதிலே ஒரு திரைப்படம் இயக்கி ‘ உலகில் இளம்
இயக்குனர்’ என்ற பெருமைக்குரியவர்
ஆனார். இவரது இன்னொரு மகளான ‘சமீரா’ தலைசிறந்த பெண் இயக்குனராக பின் காலத்தில்
வந்தார். சமீரா இயக்கிய ‘ஆப்பிள்’ திரைப்படம் தன் தந்தை மொசான் மேக்பல்பப் ஐ
மிஞ்சிய ஒரு படைப்பாக வந்தது.
மொசான் மேக்பல்பப்:-
“ஆனா விதை நான் போட்டது”
மேக்பல்பப் இவரது பள்ளியில் திரைப்படம் மட்டும் அல்லாமல்
மற்ற திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது,சமையல் நிபுணர் கலை, கம்யூட்டர் கலை, ஓவியம் வரைவது, கதை எழுதுவது
போன்றவற்றையும் கற்று கொடுத்தது.
தான் கற்று கொண்டதை மற்றவருக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்
என்ற எண்ணம் இவரை ஒரு இயக்குனரில் இருந்து ஒரு தலை சிறந்த ஆசிரியராக வரலாற்றில்
நிறுத்தியது. ஈரான் நாட்டிற்கு எதிராக செயல்பட்டார் என்று இளம் வயதில் சிறைச்சாலை
சென்ற இவர், தன் தாய் நாடான ஈரானுக்கு 50 மேற்பட்ட சர்வதேச விருதுகளை
கொடுத்தது. இன்று வரை பல திரைப்பட கல்லூரியில் ஈரானிய திரைப்படங்கள் பார்த்ததுண்டா
என்று அந்த நாட்டை மேல் தூக்கி சொல்வதற்கு காரணம் இவரும், இவரது பள்ளியில் இருந்து வெளி வந்த இயக்குனர்களின்
படைப்புகளும் தான்.
இந்த தருணத்தில் தலைசிறந்த ஆசிரியர் மொசான் மேக்பல்பப் ஐ
நினைவு கோருவோம்.
நன்றி ,
விஜய் தேசிங்
9884112420
Vijaydesing555@gmail.com




No comments:
Post a Comment