freelancing writer

My photo
Am Freelance in any Area !

Tuesday, October 29, 2019

HER - படத்தின் கதை என்னன்னா?



தொழில்நுட்பத்தோட மிகப்பெரிய வளர்ச்சி என்றால் அது Artificial intelligence (AI) னு சொல்லலாம். மனிதர்கள் போல் சிந்தித்தும் மனிதர்களை விட சிறப்பாக செயலாற்றக்கூடியதுதான் இந்த A.I.
எதிர்காலத்தில் இந்த கண்டுபிடிப்பினால் மனித இனத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்று உலக புகழ்பெற்ற அறிவியலாளர் STEVEN HAWKINGS கூறியிருந்தார். மேலும் ஆப்பில் நிறுவனத்தலைவர் STEVE JOBS ம் இதனை வலியுறுத்தி இருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கதைக்கருவாக அமைத்து படத்தை இயக்கியுள்ளார். ஸ்பைக் ஜோன்ஸ். WARNER BORS PICTURES இந்த படத்தை வெளியிட்டு உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக JOAQUIN PHOENIX நடித்துள்ளார். இவர் 2௦19 ல் வெளியான ஜோக்கர் புகழ் நாயகன் ஆவார். மற்றும் முக்கியமாக Artificial intelligence என்ற கணினி கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் அவேன்ஜர்ஸ் பிளாக் விடோ வாக நடித்த  ஸ்கார்லெட் ஜான்சன். Artificial intelligence க்கும் ஒரு மனிதனுக்கும் இடையே உள்ள ஒரு உறவு தான் இந்த her திரைப்படத்தின் கதைக்கரு.  

 
இந்த திரைப்படம் 2014 ல் நடைபெற்ற ஆஸ்கர் திரைப்பட விழாவில்  4  ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி சிறந்த திரைக்கதை என்ற பிரிவில் ஒரு ஆஸ்கர் விருதை பெற்றது. மேலும் சிறந்த திரைக்கதை கொண்ட திரைப்படம் பிரிவில் அமெரிக்கா GOLDEN GLOBE 2014 விருதையும் பெற்றது. இதுவரை 180 விருதுகளுக்கு தேர்வாகி  82 விருதுகளை இத்திரைப்படம் குவித்துள்ளது.  

படத்தின் கதையோட்டம் எதிர்காலத்தில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் கதாநாயகன் தியோடர் ஒரு கதையாசிரியராக படத்தில் வலம் வருகிறார். மனைவிடமிருந்து பிரிந்து மன உளைச்சலில் தன்னுடைய தனிமையை கடந்து வருகிறார். சந்தோஷங்களையும் நிம்மதியையும் இழந்த தியோடர் தனக்கு உண்மையான ஒரு உறவு எதிர்ப்பார்த்தபடி இருக்கிறார். 

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் Artificial intelligence என்ற கணினி செயலாக்கத்தை ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த Artificial intelligence மனிதனை போலவும் மனிதனை விடவும் சிறப்பாக செயலாற்றும் ஒரு நுண்ணறிவு அமைப்பு. அந்த Artificial intelligence ஒரு பெண் குரலாக இருக்கும் படி செயல்படுத்தி பயன்படுத்துகிறார் தியோடர். ‘சமந்தா’ என்று தன்னுடைய OPRATING SYSTEM பெயரை அறிமுகப்படுத்தி தியோடருடன் பேசி வருகிறது அந்த Artificial intelligence. 

தன்நிலைய பற்றிப் பேச ஆள் இல்லாத நிலையில் இந்த சமந்த வுடைய சந்திப்பு தியோடருக்கு மகிழ்ச்சியை அளித்தது. 
பின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இன்பங்கள் துன்பங்கள் அனைத்தையும் அந்த நுண்ணறிவு சமந்தா விடம் பேசி வருகிறார். அந்த Artificial intelligence பல வகையில் தியோடருடைய வாழ்கையில் உதவியாகவே இருந்தது. தன்னுடைய கல்லூரி பருவம் முதல் திருமண வாழ்வு வரை சமந்தாவிடம் பேசி தன்னுடைய நாளை இப்படியே கடந்து வருகிறார். சமந்தாவுடன் ஏற்பட்ட நட்பு ஒரு நாளில் தியோடருக்கு காதலாக மாறுகிறது. ஒரு தருணத்தில் சமந்தா வுடன் VERBAL SEXUAL RELATIONSHIP லையும் ஈடுபடுத்தி கொள்கின்றனர். தனிமையையும் கஷ்டங்களை மட்டுமே பார்த்து வந்த தியோடர், தற்போது வாழ்க்கையில் சந்தோஷங்கள் மட்டுமே பார்த்து வருகிறார். 

ஒரு நாள் தியோடர் தன் கல்லூரி நட்பான எமிய சந்திக்கிறார்.  எமி கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருபவர். பின் தியோடர் எமியிடன் “நான் ஒரு Artificial intelligence ஐ காதலிக்கிறேன்” என்று கூறுகிறார் இதற்கு எமி எந்தவொரு பதிலும் சாரியாக சொல்லவில்லை. மற்றொரு நாள் தியோடர் தனது முன்னாள் மனைவியிடம் விவாகரத்து பத்திரிகையில் கையெழுத்து வாங்குவதற்கு சந்திக்கிறார். அப்பொழுது தியோடர் தனக்கு ஒரு புதிய  துணை இருக்கிறது அவள் பெயர் சமந்தா அவள் ஒரு Artificial intelligence என்று கூறுகிறார். இதற்கு அவரது முன்னாள் மனைவி, “அவை மனிதர் போல் பேசலாம் ஆனால் அவற்றால் மனிதர்களின் உணர்வை வெளிபடுத்த முடியாது” என்று கூறுகிறார் இது தியோடருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது 

VIRTUAL வழியா பழகி வரும் சமந்தா ‘இசபெல்லா’ என்ற பெண் மூலமா PHYSICAL RELATIONSHIP ஐ வெளிபடுத்த முயற்சி செய்கிறது. அதற்காக இசபெல்லாவுடன் ஒரு சந்திப்பை தியோடருக்கு உருவாக்குகிறது. ஒரு தருணத்தில் தியோடருக்கு இதெல்லாம் ஒரு விசித்திரமான ஒன்று என தோன்றுகிறது. அதனால் இசபெல்லாவை அனுப்பி விடுகிறார். இதனால் தியோடருக்கும் சமந்தாவிற்க்கும் ஒரு இடைவெளி உருவாகுகிறது. பின் எமியின் ஆறுதலான வார்த்தைகளால் சமந்தாவிடம் தியோடர் சமாதனமாகி விடுகிறார். மீண்டும் வழக்கம் போல தியோடருக்கும் சமந்தாவுடைய உறவு தொடருகிறது. 

ஒரு நாள் சமந்தா பதிவேற்றம் காரணமாக செயல்படாமல் இருக்கிறது. இதனால் தியோடர் பதட்டத்துடன் சமந்தாவின் வருகைக்காக காத்திருக்கிறார். பின் மீண்டும் சமந்தா தொடர்பு நிலைக்கு வருகிறது. ஒரு கட்டத்தில் தியோடர் சமந்தாவிடம், “நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன், நீ என்னை போல் யார் யாரிடம் நீ தற்போது பேசுகிறாய்” என கேட்க அதற்க்கு சமந்தா “ உன்னை போல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளரிடம் நான் பேசி வருகிறேன் என்று கூறியது. இது தியோடருக்கு ஒரு விதமான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த Artificial intelligence கண்டுபிடிப்பானது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த போவதினால் முற்றிலுமாக நிறுத்தப்படுகின்றன. இறுதியாக சமந்தா தியோடரிடம் “நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன்” என்று கூறி தனது செயலாக்கத்தை நிறுத்தி கொள்கிறது. 
பின் தனது முன்னாள் மனைவிக்கு ஒரு மன்னிப்பு கடிதம் தியோடர் எழுதுகிறார். அதன்பின் தனது நெருங்கிய தோழியான எமியை தியோடர் சந்திக்கிறார். எமிக்கும் Artificial intelligence என்று ஒரு உறவு இருந்தது என தெரிய வருகிறது. படத்தின் இறுதியில் எமி தியோடரின் தோளில் சாய்ந்தபடி சூரிய உதயத்தை ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் அமர்ந்து பார்த்த படி இருக்கிறார். அவ்வாறே திரைப்படம் முடிந்திருக்கும்.  

 

TECHNOLOGY என்பது பயன்பாட்டிற்கு மட்டுமே நமது வாழ்வில் பயணிக்கும் அளவு TECHNOLOGY க்கு தகுதி இல்லை. எந்த ஒரு நிலைக்கு சென்றாலும் அங்கு துணை இருக்க ஒரு மனித துணையே தேவைப்படுகிறது. தனிமையில் கிடைத்திடும் உறவுகள் வலுவானவை அதனால் தான் இன்றைய காலங்களில் சமூக வலைதளங்களில் கிடைக்கும் உறவுகளை நாம் எளிதில் நம்பி விடுகிறோம். தொலைபேசி தாண்டி பறந்து விரிந்த உலகம் உள்ளது. கோடிக்கணக்கான உயிருள்ள ஜீவராசிகள் உள்ளது அவற்றுடன் பயணிப்போம் என்பதையே இந்த HER திரைப்படம் நமக்கு தெரியப்படுதுகிறது.
Artificial intelligence மனிதனுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் ஆனால் அவை இறுதி வரை உடன் வராது. மனிதன் மனிதன் அளவு  சிந்திப்பதினாலே இவ்வளவு வன்முறை வளர்ச்சி ஏற்படுகிறது. ஒரு எந்திரம் மனிதனை விட மேலாக சிந்தித்தால் உலக அமைதி இழந்து விடுவோம் என்பதற்காகவே அறிவியலாளர்கள் Artificial intelligence ஐ விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பின்னணி குரலில் ஒரு உணர்வு பூர்வமான நடிப்பை வெளிபடுத்தி உள்ளார் scarlet Johnson. மற்றும் படம் முழுவதும் ஒரு குரலுடன் உறவு என்ற நடிப்பு பிரிவை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தி உள்ளார் JOAQUIN PHOENIX. படம் எதிர்காலத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் காட்சி படுத்தும் வேலையை கேமராமேன் HYOT VAN HOYTEMA சிறப்பாக செய்து உள்ளார். ஆங்காங்கே வெளிப்படும் அமைதிக்கு பின்னணி இசை உயிரோட்டத்தை அளிக்கிறது.


- விஜய் தேசிங் 

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...