freelancing writer

My photo
Am Freelance in any Area !

Saturday, October 20, 2018

மெர்சல் - ஆர்பாட்டமா? வரவேற்ப்பா?




ஒரு திரைப்படம் இன்று இந்திய ஊடகங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் காரணம் என்ன? காரணி யார்?
அட்லி ஒரு தனியார் ஊடகத்தில் மெர்சல் திரைப்படம் முன்னோட்டம் போது, "இந்த படத்துல வர ஒரு சீன பத்தி தமிழ்நாடே பேசும்” என்று பதிவிட்டதின் நோக்கம் என்ன? திரைப்படத்தின் வசனம் கதாநாயகனுக்கு தெரியும், தெரிந்தே அதை மாற்றாமல் நடித்ததிற்கு நோக்கம் என்ன?
நல்ல திரைப்படங்களை திருத்தம் என்ற பெயரில் அடையாள குறியீடு அளித்து அசிங்க படுத்தும் தனிக்கை குழிவினர் அந்த காட்சியை கண்டு திருத்தாமல் வைத்ததற்கு காரணம் என்ன?
ரசிகர்கள் மட்டும் போற்றாமல் தேவை இல்லாமல் தூற்றும் இதர ரசிகர்கள் மத்தியிலும் அந்த காட்சிக்கு புகழ் பெற்று வரவேற்கப்பட்டது. ஏன்? இதுவரை கண்டு கொள்ளாத இந்திய ஊடகங்கள் இந்துவத்துவ வாதிகளின் கருத்தின் பிறகே தலையில் தூக்கி கொண்டதின் அரசியல் என்ன?
ஐம்பது ரூபாய் டிக்கெட் ஐ 150 ரூ கொடுத்து வாங்கி எதுவும் பேசாமல் திரைப்படம் பார்க்கும் அன்றாட மக்களின் எண்ணங்கள் என்ன? இவ்ளோ கேள்வி மட்டும் இல்லாம பல கேள்விகள் இந்த திரைப்படத்தை சுத்தி வருது! “ஆளப்போறான் தமிழன்” னு பாட்டு விட்டதுல இருந்து, கடைசியா விஜய் முதல்வர சந்திச்சது வரை என்ன போயிட்டு இருக்கு.
தற்கால நிகழ்வ பேசுனா திரைப்படத்திற்கு மேலும் கெடுபிடியும், பேசலனா உதவாத கலை எனவும் பேச தெரிந்தவர்கள் தான் மிச்சம். ஏன் இவ்ளோ கெடுபிடி , கேளிக்கை வரியை குறைக்கிறதுக்கு மக்களும் ஏன் கேக்கல! ஆம, இவிங்க திரைப்படத்தை விமர்சிக்கவும். தயாரிப்பாளர விட இவங்க தான் வசூல் பத்தி யோசிச்சு பெருமை படுறதும், இருந்த என்ன ஆகும். இத கூட பொருத்துக்கலாம். திரைப்பட காட்சியை சாதியவாதிகள் சாதியோடு ஒப்பிடுவதுலாம் கவலைகிடம். “உண்மைய சொன்ன கோவம் வரும்” இந்த வசனம் திரைப்படத்துல யாரும் கவனிக்கல போல,  நம்ம டாக்டர் அக்காக்கும், தெய்வ திருமகன் எச்.க்கும் ஏன் கோவம் வந்துச்சு!
திரைப்படத்த விமர்சிக்கும் போது அதுமட்டும் விமர்சிக்காம ஒரு நடிகரோட திருமணத்த பத்தியும், அவரோட மதத்த பத்தியும் விமர்சிக்குறது கேவலமான செயல். 
2G ஊழல் பத்தி பேசாத இவங்க, ஜோக்கர் படத்த பத்தி பேசாத இவங்க, இப்ப மட்டும் ஏன் பேசுறாங்க. ஏன்னா GST இவங்களோடது, குஜராத் ல முதலமைச்சரா இருந்த போது GST ய எதிர்த்து கருத்து சொன்ன இவங்க, ஒரு திரைப்படம் கருத்து சொன்னா என்ன?
அரசியலையும் திரைப்படத்தையும் ஒன்னா சேர்த்து புகழ்பெற்ற தமிழ்நாட்டுக்கே இந்த கதியா?
இல்ல கிருத்துவ நடிகர் படம்னால எதிர்க்குறாங்களா? “அரசியல் பேசாதே! இது சுதந்திர நாடு” தாரக மந்திரம் அட போங்கய்யா!இந்த நிகழ்வுலிருந்து திரைப்படங்களுக்கு சுதந்திரம் இல்லனு தெரியுது.. இதபத்தி விமர்சிக்காம அரசியல் வாதிகள் அதற்கான தீர்வுகளை செய்து முடிக்கலாம்

விஜய் தேசிங்

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...