freelancing writer

My photo
Am Freelance in any Area !

Thursday, October 31, 2019

பாகவதர் வாழ்கையை மாற்றிய கொலை வழக்கு.



(பாகவதர் உட்பட மூவரை நாடுகடத்த தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம்). 

பொழுதுபோக்கிற்காக ஏங்கிய மக்களை கையை பிடித்து தமிழ் சினிமா மீது ஈடுபாடு கொள்ள செய்தவர் எம் கே தியாகராஜா பாகவதர். 
அவர் பசுமையான முகமும் கட்டுடல் கொண்ட பேரழகனும் ஆவார். தன்னுடைய வெண்கல குரலினால் தமிழ் சினிமா ரசிகர்களை அடிமை செய்து வைத்தவர். 
தங்க தட்டில் சாப்பாடு ஓய்வெடுப்பதற்கு வெள்ளி ஊஞ்சல் என்று பிரபலங்கள் யாரும் நினைத்து பார்க்க முடியாத வாழ்கையை வாழ்ந்தவர். M.K.  தியாகராஜர். மாயவரத்தில் 191௦ மார்ச் 1 ல் கிருஷ்ணசாமிக்கும் மாணிக்கம்மாளுக்கும் பிறந்தவர் மாயவரம் க்ரிஷனசாமி தியாகராஜர். சிறு வயதில் படிக்க பிடிக்காமல்  தான் ஒரு பாடகர் ஆக வேண்டும் என்று விரும்பினார்.. இதற்கு அவரது பெற்றோரிடையே எதிர்ப்புகள் வலுத்தது. பின் வீட்டை விட்டு வெளியேறினார். மிகுந்த ஆர்வமும் உழைப்பும் அவரை ஒரு பாடகராக மாற்றியது. பல கச்சேரிகளில் இவரது பாடல் மக்களை  மெய்மறந்து நிற்க செய்துள்ளது. இவரது வெண்கல குரலுக்காகவே எளிதாக நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 
1934 ல் பவளக்கொடி என்ற நாடகத்தில் நடித்தார். அந்த நாடகத்தை பார்த்த சில கலைஞர்கள் இவரை வைத்தே பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை தந்தது. இதனையடுத்து நவீன சாரங்கதாரா, சத்யசீலன், அசோக்குமார் போன்ற படங்களும் வெற்றிபெற்று  M.K.  தியாகராஜர அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. அதன் பின் 1937 ல் வெளிவந்த சிந்தாமணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை M.K.  தியாகராஜருக்கு அளித்தது. மேலும் இது தமிழில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றது. 

இந்த திரைப்படத்தில் வந்த லாபத்திலிருந்து மதுரையில் சிந்தாமணி என்ற பெயரில் திரையரங்கம் கூட அமைக்கப்பட்டது. சிந்தாமணியை அடுத்து M.K.  தியாகராஜர் நடிப்பில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படம் சிந்தாமணியின் சாதனையை முறியடித்து வெற்றியை தந்தது. இதன்பின் M.K.  தியாகராஜர் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வந்தார். இதைவிட 1944 ம் ஆண்டு வெளிவந்த ஹரிதாஸ்  திரைப்படம் தொடர்ந்து மூன்று வருடம் ஓடி பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இந்த வளர்ச்சிக்கு காரணம் இவரது நடிப்பும் அவரது வெண்கல குரலும் தான் என பேசப்பட்டது. இவரது பாடலை கேட்பதற்காகவே திரையரங்கில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 

M.K.  தியாகராஜ பாகவதர் பற்றியான பல சுவாரஸ்மான தகவல்களும் அன்று  இருந்தது.  இவர் வெளி ஊருக்கு காரில் செல்லும் போது இவரது ரசிகர்கள் வழியிலே பாட சொல்லி கேட்பார்கள், அதனையும் ஏற்று பாகவதர் பாடியும் உள்ளார். மற்றும் இவரது தலை முடி போல அன்றைய இளைஞர்கள் இவரைப்போலவே தலை முடியும் வைத்து உள்ளனர். அன்றைய TREND SETTER என்றும் சொல்லலாம். 
இப்படி தன்னுடைய வாழ்கையிலும், ரசிகர்களோட வாழ்கையிலும் சந்தோஷத்தை பார்த்து வந்த பாகவதர்,
1944 ம் ஆண்டு நடந்த லக்ஷ்மி காந்தன் என்பவரின் கொலை இவர் வாழ்கையை தலை கீழாக மாற்றியமைத்தது.   
லஷ்மி காந்தன் என்பர் அன்றைய காலத்தில் ‘சினிமா தூது’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தவர்.  இவரின் சினிமா தூது இதழில் சினிமா விமர்சனம் மட்டுமல்லாமல் அன்றைய திரையுலக நட்சத்திரங்களோட தனிப்பட்ட வாழ்க்கையும், எந்த நடிகர் எந்த நடிகையுடன் உறவு வைத்துள்ளனர் என்ற புனைவு கதைகளையும் வெளியிட்டு வந்துள்ளார்.  இவர் பெயரில் முன்பே சில வழக்குகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட சினிமா தூது இதழ் ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்றும் சிலர் விமர்சித்துள்ளனர். இன்றைய காலத்தில் வெளிவரும் கிசு கிசுக்களை சாதரணமாக மாறி விட்டது. ஆனால் அன்றைய பொழுதில் கிசு கிசு என்பவை சினிமா நட்சத்திரங்களின் சமூக அந்தஸ்தை பாதிக்கும் ஒன்றாக இருந்தது. இதனால் பல நட்சத்திரங்கள் பாதிப்பையும் சந்தித்தனர். இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாகவதருடன், கலைவாணர் என்று அறியப்படும் NS.கிருஷ்ணன் மற்றும் கோவை பக்க்ஷி ராஜா ஸ்டுடியோஸ் உரிமையாளரான ஸ்ரீராம் நாயுடு  மூவரும் அன்றைய மதராஸ் ஆளுநரிடம் சினிமா தூது பத்திரிக்கையின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். பின் ஆளுநர் விசாரணைக்கு பின் சினிமா தூது பத்திரிக்கையின் உரிமைத்தை ரத்து செய்கிறார். பின் லக்ஷ்மி காந்தன் போராடி மீண்டும் சினிமா தூது இதழை வெளியிடுகிறார். அது மீண்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது. பின் லஷ்மி காந்தன் இந்து நேசன் என்ற பெயரில் பத்திரிக்கையை துவங்குகிறார். அதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரிய ஆளுமைகளையும் விமர்சித்து புனைவு கதைகளை வெளியிடுகிறார். பின் பலர் தன் பெயரும் பாதிக்கப்படும் என்ற பயத்தில் பலர் லக்ஷ்மி காந்தனுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டனர். தன்னைப் பற்றி புகார் கொடுத்த மூவரை தன்னுடைய பத்திரிக்கையில் அதிகமாகவே புனைவு கதைகளை வெளியிட்டு விமர்சித்து வந்துள்ளார் லஷ்மி காந்தன்.


1944 ம்  ஆண்டு ஒரு நாள் லக்ஷ்மி காந்தன் யாரும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தப்படுகிறார். அந்த நிலையிலும் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் நடந்தை கூறுகிறார். பின் போலிஸ் ஸ்டேஷன் சென்று ஒரு புகாரையும் அளித்துள்ளார். தான் அளித்த புகரில் பாகவதர் பெயரையோ அல்லது கலைவாணர் பெயரையோ அவர் குறிப்பிடவில்லை. லஷ்மி காந்தன் மறுநாள் காலையில் மருத்துவமனையில் இறந்து விடுகிறார். பின் விசாரணையை தொடர்ந்த பொலிசார், லஷ்மி காந்தானால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விசாரிக்கின்றனர். இதன்படியே பாகவதர், கலைவாணர், போன்றோர் பெயரும் இதில் வருகிறது. அதில் பாகவதரின் வரவு செலவு குறிப்புகளில் லஷ்மி காந்தன் தாக்கப்படுவதற்கு முன்பு ஒரு பெரும்தொகை செலவு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர் போலீசார். இதுபற்றி சரியான விளக்கம் பாகவதர் அளிக்காததால் இதனை ஒரு ஆவணமாகவே போலீசார் எடுத்துக்கொண்டனர். முன்னதாகவே லஷ்மி காந்தனுக்கும் பாகவதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு பாகவதர் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர்.


லஷ்மி காந்தன் கொலை வழக்கில்  வேறு ஒரு தகவலும் இருந்தது. இதை இவர் குத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூறியதாக சொல்லப்படுகிறது. தனுஷ்கோடியிலிருந்து சென்னை வந்த ரயிலில்  தேவக்கொட்டையை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செயப்படுகிறார் அந்த கொலையில் பிரபல சினிமா நடிகை சமந்தபட்டதாகவும், அந்த கொலை நடந்த ஸ்டேஷனிலிருந்து அடுத்த ஸ்டேஷனில் அவர் இறங்கி விட்டதாகவும், அந்த நடிகைக்கு பெரும் அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என்பதாகவும் ஆனால் தான் அதைப்பற்றி ஆதாரத்துடன் செய்தி வெளியிடபோகிறேன் என்று லஷ்மி காந்த சொன்னதால்  தகவல் உள்ள நிலையில் இதன் காரணமாக கூட இவர் கொலை செயப்பட்டிருக்கலாம் என்பது அன்றைய பொழுதில் வந்த தகவல்கள் ஆனால் அதைபற்றி ஆதாரம் ஏதும் கடைசி வரை கண்டறியப்படவில்லை. பாகவதர் உட்பட மூவரும் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நீதிமன்ற விசாரணையில் யாரும் எதிர்பாராத விதத்தில் தீர்ப்பு அமைந்தது. ‘பாகவதர் உட்பட மூவரும் குற்றவாளிகள் இவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும்’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின் மூவரின் தரப்பில் மேல்முறையீடு செய்தும் தீர்ப்பை மாற்ற முடியவில்லை. 

இந்தியாவில் அன்றைய காலத்தில் சுப்ரீம் கோர்ட் உருவாக்கப்படாத காலகட்டம். சுதந்திரத்திற்கு பின்பே சுப்ரீம் கோர்ட் உருவாக்கப்பட்டது. அன்று ஒரு வழக்கு மேல்முறையீடு செல்ல வேண்டுமானால் லண்டனில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு தான் செல்லவேண்டும். அப்படியே பாகவதர் வழக்கு மேல்முறையீட்டை சந்தித்தது லண்டன் நீதிமன்றத்தில் மதராஸ் நீதிமன்றம் இந்த வழக்கை சரியாக விசாரிக்க வில்லை என்றும் இந்த விசாரணையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு அளிக்கபட்டது. அதன்படியே மறுவிசாரணை எடுத்து கொள்ளப்படுகிறது. அதன்முடிவில் பாகவதர் உட்பட மூவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த விசாரணை காலக்கட்டத்தில் வழக்கின் செலவிற்காக பாகவதரின் சொத்துகளும் குறைந்தது. 

சிறையில் இருந்து வெளியான பாகவதருக்கு முன்பு இருந்த கலை அழகு குறைந்தும் அவரது முடி அழகும் இல்லாமல் கண்களில் கருவளையத்துடன் பரிதாப நிலையில் காணப்பட்டார். 

சிறைக்கு செல்வதற்கு முன்பு தன்வசம் இருந்த 12 படங்களும் தற்போது நழுவியது. பின் சமூகத்திலும் இவருக்கென இருந்த சாம்ராஜ்யம் மொத்தமாகவே சரிந்தது. சிறைக்கு பின் சினிமா வை தவிர்த்து வந்தார். பின் நிர்பந்தத்தின் பெயரில் சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை எல்லாம் தோல்வியிலே முடிந்தது. இதன் காரணமாக சினிமாவை விட்டு மொத்தமாகவே வெளியேறினார். மற்றும் சிறையிலிருந்து வெளிவந்த கலைவாணர் தொடர்ந்து நாடகத்திலும், சினிமாவிலும் பயணித்து வந்தார். பின் திராவிட கழகத்திலும் இணைத்தார். திராவிட கழகத்திலிருந்து வந்த அழைப்பை பாகவதர் ஏற்க மறுத்துவிட்டார். இதன் பின் மீண்டும் இசை பயணத்தை தொடங்கி கச்சேரிகளில் பாடி வந்தார் பாகவதர். 

பின் ஒரு கட்டத்தில் அதனையும் வெறுத்து பல  கோவில்களுக்கு செல்ல துவங்கினார். மேலும் டயாபடிஸ் காரணமாக அவதியடைந்தார் பாகவதர். 1959 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல்   உயிரிழந்தார்  மாயவரம் கிரிஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். 

எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் எங்கோ எதனாலோ செய்யப்படும் ஒரு செயல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றம் சந்தோஷமாகவும் அமையலாம் சோகமாகவும் அமையலாம். இந்த மாற்றங்களில் பாகவதர் ஒன்றும் விதிவிலக்கல்ல. 
கலை வாழ்வில் ஓங்கி கொடிகட்டி பறந்த பாகவதர் என்றும் தன் வெண்கல குரலினால் மக்கள் மனதில் உலா வர வேண்டும். 

நன்றி 

- விஜய் தேசிங் 



Tuesday, October 29, 2019

"அவனுக்கு ஒரு நாள் மாதவிடாய்" - சிறுகதை




அடையாறு ஐயப்பன் கோவில் பேருந்து நிலையத்தில் ஒருவன் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தான். அது ஒரு பூஜை வேளை போல, ஒரு விதமான கோவில் வாசனை, “கார்த்திகை தீபம் சுவாமிக்கு கற்பூரதீபம் சுவாமிக்கு” என பாடல் ஒருபுறம் ஒலித்து கொண்டிருந்தது. 
எதிரே ஒரு சாப்பாடு கடை, சுட சுட இட்லியை தட்டிலிருந்து உதிர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டனர். பின்பு சாம்பார் சமையலில் இருக்கும் போது அதை கட்பனியன் போட்ட ஒரு தாத்தா கரண்டியில் எடுத்து நக்கி பார்த்து தன் நாக்கை தட்டி, சப்பு கொட்டினார். அது அவருக்கு பேரின்பம் புருவம் தூக்கி புன்முறுவலிட்டார்.  இரைச்சலான சாலை. திடீரென வயிற்று வலி 
காலையில் சாப்பிட்ட தோசை, தக்காளி சட்டினி தான் என நினைத்து லேசான பதட்டத்துடன் இருந்தான். குணிந்து பார்த்தான்.
வெள்ளை பேண்ட் ல் இடது கால் இடத்தில் படர்ந்தும் படராமல் சிவப்பு கரை. வேகமாக நடந்தான். ஒரு அரசு இலவச கழிப்பீடத்திற்கு சென்றான்.  அங்கு மேசையில் அமரந்திருந்த பெண் துப்புறவு பொறுப்பாளரை நிமிரந்து பார்க்காமல் மர மேசையில் சட்டென ஐந்து ரூபாய் வைத்து மடமடவென சிவப்பு நிற ஆண் குறியீடு உள்ள ஆண் வரிசைக்கு சென்றான்.
அங்கிருந்த ஆணுறை பெட்டியில் அவன் தோள் இடித்து சென்றான். 
கழிப்பறை அனைத்தும் தாழிட்டு இருந்தது. ஒரு கழிப்பறை வாசலில் ஒருவன் பீடி பிடித்தபடி நின்றிருந்தான். அவ்வப்போது அந்த பெண் துப்புறவாளி தண்ணீர் ஊற்றி கழிவிருப்பார் போல,அந்த இடம் ஈரமாக சதசதவென இருந்தது. 
சடனு ஒரு சப்தம் தகர கதவு திறந்தது. இவனை தள்ளி விட்டு பீடி பிடத்திருந்தவன் உள்ளே சென்று பெருமூச்சுடன் சிரித்து கொண்டே போனான். பேண்ட் வழியே தனது செருப்பை தொட்டது ஒரு துளி இரத்தம். 
கால்கள் நடுங்க, முகம் வேர்வை கொண்டு கதவை தட்டினான். "அடங்கோத்** எவன்டா அது" னு உள்ளே இருந்து குரல் வர..
பக்கத்து கழிப்பறையில் இருந்து ஒருவன் வெளிவந்தான். இவன்‌ நின்றிருந்த இடத்திலிருந்து அந்த கழிப்பறையினுள்‌ சென்றான். தகர கதைவை சட்டென சாத்தினான்.‌ கதவு தளதளவென ஆடியது. அவசரமாக உள்ளே செனசென்றான பெல்ட்டை கழட்டி, தனது பேண்ட் ஐ கழட்டினான். 
அவசரத்தில் கழட்டிய போது தனது முழுகால் சட்டையின் பட்டன் உருண்டு கழிப்பறை குழாயில் விழுந்தது. தனது உள்ளாடையை கழட்டி குணிந்து பார்த்தான். அவன் இனப்பெருக்க உறுப்பிலிருந்து இரத்தம் வழிந்தது. அவன் கையில் அது பட்டது. தன் கைக்குட்டையை தன் உள்ளாடையில் சுருட்டி, தன் முழுகால் சட்டையை சற்று தண்ணீரில் தேய்த்து அணிந்து கொண்டான்.அந்த இரத்த கரை வெளிர் சிவப்பில் லேசாக இருந்தது. 
முகத்தை கழுவி கொண்டு, கழிப்பறையிலிருந்து வெளியே வந்து நின்றான். சற்றும் ஓய்வில்லாமல் மக்கள் நடமாடியே இருந்தனர். என்றும் இல்லாமல் அன்று அனைவரும் இவனையே பார்ப்பது போல் தோன்றியது. வேகமாக அங்கிருந்து நடந்து ஒரு குறுக்கு சந்தின்‌ வழியே வந்து ஒரு நடைபாதையில் அமர்ந்தான். ஒரு புறம் வயிற்று வலி , எடை மிகுந்த கல்லை அவன் வயிற்றில் போட்டு எடுத்தது போல் தொடர்ந்து வலியில் அவதிப்பட்டான். தன் நண்பர்களுக்கு தெரிந்தால் அவனை கேலி செயவார்கள். தன் பெற்றோருக்கு தெரிந்தால் அவனை வீட்டின் மூலையில் அமரவைத்து விடுவார். அவனுக்கு பிடித்த பொருளை சாப்பிட முடியாது. அவனுக்கு பிடித்த ஆடையை போட முடியாது. அவன் நினைத்த இடங்களுக்கு எளிதில் செல்ல முடியாது. பெரிய டேங்க வெச்ச பல்சர் வண்டியை ஓட்ட முடியாது. தன் காதலி என்ன நினைப்பாள்.  அவனோட கனவு ஆட்டமான கபடி ய எப்படி விளையாடுவான். அம்மா அனுப்ப மாட்டாங்களேன். சரி தனிமைய போக்கிடுனு கடவுளிடம் கேக்கலாம்னு போன கோவில் உள்ளையும் விட மாட்டாங்க. சரி இந்த விசயம் நமக்குள்ள இருக்கட்டும்.இத யார்ட்டையும் சொல்லகூடாதுனு நினைச்சு, தானா ஒரு சானிட்டரி நாப்கின் வாங்கி அணியலாம் னு பாத்தா மெடிக்கல் சாப் காரன் ஒரு மாதிரியா பாக்க வாய்ப்பு இருக்கு. கருப்பு பாலிதீன் கூட அரசு தடை செய்து விட்டது அவன்‌ இனி எப்படி மறைத்து தருவான். நான் அந்த ஆரஞ்சு கலர் நாப்கீன் பேக் க எப்படி எடுத்துட்டு போவன். 
இப்படிதான் பாலையங்கோட்டை, சிறுமிக்கு நடந்துச்சு அவள கேலி செஞ்சு சின்ன வயசுல தற்கொலைக்கு தள்ளி விட்டுச்சு இந்த சமூகம். புயல் அப்போ வீட்டிலே இருக்க வெச்சு சுவர் சாய்ந்து பலியாக வைத்தது இந்த மாதவிடாய்.
எனக்கும் இதுல எதனா நடந்துடுமோ? னு பல கேள்வி ஓடிட்டு இருந்துச்சு. 
அந்த தெருமுனையில, யோசிச்ச படி உட்கார்ந்து இருக்கான் . 

இப்படி ஒரு நிமிடத்துல ஒரு ஆணுக்கு மாதவிடாய் வந்த பெண்ணோட வெள்ளை சுடிதார்ல ஒட்டி இருந்த குருதிய பாத்ததும், ஆயிரம் பயத்தையும் அவன் கண்ணுக்கு முன்ன கொண்டு வந்தது. 

ஏன் இந்த பயம்?‌‌‌‌ அவனுக்கு வந்தது.. அந்த பயத்த பாத்து ஏன் ஓடனும்? 


இவன்‌ பயந்தது , மாதவிடாய் க்காக இல்லை. இந்த சமூகம். இந்த சமூகத்தின் நிலைபாடு. மனித இயல்ப இப்படி மாற்றி அதற்கு தீட்டு னு பெயர் வெச்சு மனித உடல் அனிச்சையிலிருந்து தூரமா வெச்சது. காரணம் என்ன? 
ஆதி காலத்துல மனிதன் சிறு காயம் வந்தாலே இறந்து போகுற நிலையில இருந்தான். ஆனால் பெண்கள் அதுபோல இல்லாம ஆரோக்கியமா வாழ்ந்து வந்தாங்க. ஐந்து நாள் தொடர்ந்து இரத்தம் வழிந்தும் அந்த பெண் இறக்கவில்லை. இனப்பெருக்கத்தில் இணைந்து குழந்தையும் பெற்றெடுத்தாள். ஆண்களால் அது முடியவில்லை. இதை பார்த்து ஆண் வியந்தான். பெண்களை வழிபட ஆரம்பித்தான். சக்தி, பராசக்தி னு பேர் வைத்தான். சிலை செதுக்குனான். கடவுளாக்கி கோவில் உள்ள வைத்தான். பின் ஆணை விட பெண் உயர்வாக இருப்பாதல்‌. எங்கு ஆண்களின் நிலைபாடு இவ்வாறு இருந்துவிடும் என்ற நிலையில் இடைநிலை காலத்தில் தனக்கென சமூகத்தினை உருவாக்கி , அதில் தந்தை வழி மரபை கொண்டு வந்து. பெண்ணை இரண்டாம் பட்சமாக தள்ளினான். சாஸ்திரம், மனுதர்மம், பிராமணம் னு சொல்லி பெண்ணோட உடல் மாற்றமான மாதவிடாய் சுழற்சியை தீட்டு என பெயர் வைத்து பெண்களை கோவில் கருவறையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் தள்ளி வைத்தனர். ஏன் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் பெரும்பாலான இருப்பு வெளியான சமையலறையிலிருந்தும் அந்த மூன்று நாளில் தள்ளி வைத்தனர். ஐதிகம், பாரம்பரியம், கலாச்சாரம் பேசும் நாடு முன்னேற வாய்ப்பில்லை. இந்த முறைகளில் கொண்டு வரப்படுவது அனைத்தும் அடக்குமுறையில் வந்து சேர்கிறது. பெண் புடவை கட்டினால் நாகரீகம், பெண் தாளி கட்டினால் கலாச்சாரம், பெண்ணுக்கு சமையல் செய்வது பிடிக்கும், பெண் மெட்டியணிய வேண்டும் என பல அடக்குமுறை வாய் பேச்சாகவும், செயல்வடிவிலும் ‌சமூகத்தில் பிணைந்து கிடக்கிறது. மனித உடலில் நிகழும் மாற்றங்களை பள்ளி கல்வி பாடத்தில் அமைப்பது மாற்றத்திற்கு ஒரு அடிகல்லாக இருக்கும். அப்படி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டவை பேசப்படவேண்டும். வீட்டில் பெற்றோர்கள் ஆண், பெண் பிள்ளைகளுக்கு மனித உடலியல் மாற்றங்களை விளக்க வேண்டும்.

- விஜய்தேசிங்

HER - படத்தின் கதை என்னன்னா?



தொழில்நுட்பத்தோட மிகப்பெரிய வளர்ச்சி என்றால் அது Artificial intelligence (AI) னு சொல்லலாம். மனிதர்கள் போல் சிந்தித்தும் மனிதர்களை விட சிறப்பாக செயலாற்றக்கூடியதுதான் இந்த A.I.
எதிர்காலத்தில் இந்த கண்டுபிடிப்பினால் மனித இனத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்று உலக புகழ்பெற்ற அறிவியலாளர் STEVEN HAWKINGS கூறியிருந்தார். மேலும் ஆப்பில் நிறுவனத்தலைவர் STEVE JOBS ம் இதனை வலியுறுத்தி இருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கதைக்கருவாக அமைத்து படத்தை இயக்கியுள்ளார். ஸ்பைக் ஜோன்ஸ். WARNER BORS PICTURES இந்த படத்தை வெளியிட்டு உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக JOAQUIN PHOENIX நடித்துள்ளார். இவர் 2௦19 ல் வெளியான ஜோக்கர் புகழ் நாயகன் ஆவார். மற்றும் முக்கியமாக Artificial intelligence என்ற கணினி கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் அவேன்ஜர்ஸ் பிளாக் விடோ வாக நடித்த  ஸ்கார்லெட் ஜான்சன். Artificial intelligence க்கும் ஒரு மனிதனுக்கும் இடையே உள்ள ஒரு உறவு தான் இந்த her திரைப்படத்தின் கதைக்கரு.  

 
இந்த திரைப்படம் 2014 ல் நடைபெற்ற ஆஸ்கர் திரைப்பட விழாவில்  4  ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி சிறந்த திரைக்கதை என்ற பிரிவில் ஒரு ஆஸ்கர் விருதை பெற்றது. மேலும் சிறந்த திரைக்கதை கொண்ட திரைப்படம் பிரிவில் அமெரிக்கா GOLDEN GLOBE 2014 விருதையும் பெற்றது. இதுவரை 180 விருதுகளுக்கு தேர்வாகி  82 விருதுகளை இத்திரைப்படம் குவித்துள்ளது.  

படத்தின் கதையோட்டம் எதிர்காலத்தில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் கதாநாயகன் தியோடர் ஒரு கதையாசிரியராக படத்தில் வலம் வருகிறார். மனைவிடமிருந்து பிரிந்து மன உளைச்சலில் தன்னுடைய தனிமையை கடந்து வருகிறார். சந்தோஷங்களையும் நிம்மதியையும் இழந்த தியோடர் தனக்கு உண்மையான ஒரு உறவு எதிர்ப்பார்த்தபடி இருக்கிறார். 

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் Artificial intelligence என்ற கணினி செயலாக்கத்தை ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த Artificial intelligence மனிதனை போலவும் மனிதனை விடவும் சிறப்பாக செயலாற்றும் ஒரு நுண்ணறிவு அமைப்பு. அந்த Artificial intelligence ஒரு பெண் குரலாக இருக்கும் படி செயல்படுத்தி பயன்படுத்துகிறார் தியோடர். ‘சமந்தா’ என்று தன்னுடைய OPRATING SYSTEM பெயரை அறிமுகப்படுத்தி தியோடருடன் பேசி வருகிறது அந்த Artificial intelligence. 

தன்நிலைய பற்றிப் பேச ஆள் இல்லாத நிலையில் இந்த சமந்த வுடைய சந்திப்பு தியோடருக்கு மகிழ்ச்சியை அளித்தது. 
பின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இன்பங்கள் துன்பங்கள் அனைத்தையும் அந்த நுண்ணறிவு சமந்தா விடம் பேசி வருகிறார். அந்த Artificial intelligence பல வகையில் தியோடருடைய வாழ்கையில் உதவியாகவே இருந்தது. தன்னுடைய கல்லூரி பருவம் முதல் திருமண வாழ்வு வரை சமந்தாவிடம் பேசி தன்னுடைய நாளை இப்படியே கடந்து வருகிறார். சமந்தாவுடன் ஏற்பட்ட நட்பு ஒரு நாளில் தியோடருக்கு காதலாக மாறுகிறது. ஒரு தருணத்தில் சமந்தா வுடன் VERBAL SEXUAL RELATIONSHIP லையும் ஈடுபடுத்தி கொள்கின்றனர். தனிமையையும் கஷ்டங்களை மட்டுமே பார்த்து வந்த தியோடர், தற்போது வாழ்க்கையில் சந்தோஷங்கள் மட்டுமே பார்த்து வருகிறார். 

ஒரு நாள் தியோடர் தன் கல்லூரி நட்பான எமிய சந்திக்கிறார்.  எமி கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருபவர். பின் தியோடர் எமியிடன் “நான் ஒரு Artificial intelligence ஐ காதலிக்கிறேன்” என்று கூறுகிறார் இதற்கு எமி எந்தவொரு பதிலும் சாரியாக சொல்லவில்லை. மற்றொரு நாள் தியோடர் தனது முன்னாள் மனைவியிடம் விவாகரத்து பத்திரிகையில் கையெழுத்து வாங்குவதற்கு சந்திக்கிறார். அப்பொழுது தியோடர் தனக்கு ஒரு புதிய  துணை இருக்கிறது அவள் பெயர் சமந்தா அவள் ஒரு Artificial intelligence என்று கூறுகிறார். இதற்கு அவரது முன்னாள் மனைவி, “அவை மனிதர் போல் பேசலாம் ஆனால் அவற்றால் மனிதர்களின் உணர்வை வெளிபடுத்த முடியாது” என்று கூறுகிறார் இது தியோடருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது 

VIRTUAL வழியா பழகி வரும் சமந்தா ‘இசபெல்லா’ என்ற பெண் மூலமா PHYSICAL RELATIONSHIP ஐ வெளிபடுத்த முயற்சி செய்கிறது. அதற்காக இசபெல்லாவுடன் ஒரு சந்திப்பை தியோடருக்கு உருவாக்குகிறது. ஒரு தருணத்தில் தியோடருக்கு இதெல்லாம் ஒரு விசித்திரமான ஒன்று என தோன்றுகிறது. அதனால் இசபெல்லாவை அனுப்பி விடுகிறார். இதனால் தியோடருக்கும் சமந்தாவிற்க்கும் ஒரு இடைவெளி உருவாகுகிறது. பின் எமியின் ஆறுதலான வார்த்தைகளால் சமந்தாவிடம் தியோடர் சமாதனமாகி விடுகிறார். மீண்டும் வழக்கம் போல தியோடருக்கும் சமந்தாவுடைய உறவு தொடருகிறது. 

ஒரு நாள் சமந்தா பதிவேற்றம் காரணமாக செயல்படாமல் இருக்கிறது. இதனால் தியோடர் பதட்டத்துடன் சமந்தாவின் வருகைக்காக காத்திருக்கிறார். பின் மீண்டும் சமந்தா தொடர்பு நிலைக்கு வருகிறது. ஒரு கட்டத்தில் தியோடர் சமந்தாவிடம், “நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன், நீ என்னை போல் யார் யாரிடம் நீ தற்போது பேசுகிறாய்” என கேட்க அதற்க்கு சமந்தா “ உன்னை போல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளரிடம் நான் பேசி வருகிறேன் என்று கூறியது. இது தியோடருக்கு ஒரு விதமான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த Artificial intelligence கண்டுபிடிப்பானது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த போவதினால் முற்றிலுமாக நிறுத்தப்படுகின்றன. இறுதியாக சமந்தா தியோடரிடம் “நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன்” என்று கூறி தனது செயலாக்கத்தை நிறுத்தி கொள்கிறது. 
பின் தனது முன்னாள் மனைவிக்கு ஒரு மன்னிப்பு கடிதம் தியோடர் எழுதுகிறார். அதன்பின் தனது நெருங்கிய தோழியான எமியை தியோடர் சந்திக்கிறார். எமிக்கும் Artificial intelligence என்று ஒரு உறவு இருந்தது என தெரிய வருகிறது. படத்தின் இறுதியில் எமி தியோடரின் தோளில் சாய்ந்தபடி சூரிய உதயத்தை ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் அமர்ந்து பார்த்த படி இருக்கிறார். அவ்வாறே திரைப்படம் முடிந்திருக்கும்.  

 

TECHNOLOGY என்பது பயன்பாட்டிற்கு மட்டுமே நமது வாழ்வில் பயணிக்கும் அளவு TECHNOLOGY க்கு தகுதி இல்லை. எந்த ஒரு நிலைக்கு சென்றாலும் அங்கு துணை இருக்க ஒரு மனித துணையே தேவைப்படுகிறது. தனிமையில் கிடைத்திடும் உறவுகள் வலுவானவை அதனால் தான் இன்றைய காலங்களில் சமூக வலைதளங்களில் கிடைக்கும் உறவுகளை நாம் எளிதில் நம்பி விடுகிறோம். தொலைபேசி தாண்டி பறந்து விரிந்த உலகம் உள்ளது. கோடிக்கணக்கான உயிருள்ள ஜீவராசிகள் உள்ளது அவற்றுடன் பயணிப்போம் என்பதையே இந்த HER திரைப்படம் நமக்கு தெரியப்படுதுகிறது.
Artificial intelligence மனிதனுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் ஆனால் அவை இறுதி வரை உடன் வராது. மனிதன் மனிதன் அளவு  சிந்திப்பதினாலே இவ்வளவு வன்முறை வளர்ச்சி ஏற்படுகிறது. ஒரு எந்திரம் மனிதனை விட மேலாக சிந்தித்தால் உலக அமைதி இழந்து விடுவோம் என்பதற்காகவே அறிவியலாளர்கள் Artificial intelligence ஐ விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பின்னணி குரலில் ஒரு உணர்வு பூர்வமான நடிப்பை வெளிபடுத்தி உள்ளார் scarlet Johnson. மற்றும் படம் முழுவதும் ஒரு குரலுடன் உறவு என்ற நடிப்பு பிரிவை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தி உள்ளார் JOAQUIN PHOENIX. படம் எதிர்காலத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் காட்சி படுத்தும் வேலையை கேமராமேன் HYOT VAN HOYTEMA சிறப்பாக செய்து உள்ளார். ஆங்காங்கே வெளிப்படும் அமைதிக்கு பின்னணி இசை உயிரோட்டத்தை அளிக்கிறது.


- விஜய் தேசிங் 

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...