தீர்க்கமான வியர்வை குளியளிட்டு
நாவறண்டு மெதுவாய் சுத்தி சுழலும் விசிறியின் தலை கீழே விழுந்தோம்.
அம்மணமாய் ஒட்டி உளரும் ஈரமெல்லாம்,
இது நீளாதோ? என வினவிய பொழுதுகள்,
அவளின் மெல்லிய சீலை என் தொடை முதல் மார்பறை வரை மூட,
கூந்தல் கொண்டு வெட்கம் மறைத்தாள், என் தேவதை!
'இரவு மிருகம் காமம்' என்பானம் அந்த கவிஞன்,
இரவு ஒரு மேகக்கூண்டு,
அதில் தழலாய் காமம் ஏற்றி
ஒளி மங்கி உறவாடுகிறது காதல்! என்கிறேன்.
நேரம் முடிந்தது, என எழுந்து நின்று
நித்தமாய் ரசித்த பொழுதில்
கட்டிலின் கீழ் வீசிய தன் உள்ளாடையை
இடது காலல் வழித்தெடுத்து
'அவன் பார்க்கிறான்' என்று வெட்கத்தில் மறைந்தோடி அணிந்தாள்!
கடிகாரத்தை தலை தூக்கி பார்த்து விட்டு
தன் சீலையை அழகாக ஒதுக்கி கொண்டு,
அவள் கைப்பையில் வைத்திருந்த குங்குமத்தை
வரி வழி விழுந்து கிடந்த குழல் கோட்டின் இறுதியில்
வேகத்தடை போல் சிவப்பிட்டாள்.
என் மணி பர்ஸில் இரண்டாயிரம் ரூபாய் எடுத்து கொண்டு
கதவோரம் இதழ் சிரித்து
குழல் ஒதுக்கி சென்று விட்டாள்,
என் மணி நேர காதலி!!!
- விஜய் தேசிங்


No comments:
Post a Comment