freelancing writer

My photo
Am Freelance in any Area !

Tuesday, October 16, 2018

மறுமணமாகாதவள்


"ஓர் அறையில் நாமிட்ட பல சண்டைகளின் முற்று ,
இனி நான்கு கால்களில் அரியணை ஏற வேண்டும்!
நீ ஏற்றிய இடை கைகளை விலக்கி
மஞ்சனையில் எனை வீழ்த்தி
விழுந்து விட வேண்டும்
உடன் நீ வேண்டும்!
என் எடை உணர்ந்து உலுக்கிய கட்டிலின் வாசம்
என் கூந்தல் அறிய வேண்டும்!
உன் மீசை ருசியரிய கழுத்தோர மச்சங்களும் ஏங்கி விட வேண்டும்,
இசைகளின் விருச்சமாய் என் முனுங்களும் முந்த வேண்டும்
என் இதய ஓசையை உன் மார்பில் இசைத்திட வேண்டும்,
துச்சாதனனாய் நீ மாற வேண்டாம்,
துயில் உரிந்த பிறகு.
ராச்சதனாய் நான் மாறுவேனா,
என் நக கீறலில் உதிர வீச்சின் பிறகு.....
கால்கள் உடைய கால்கள் சேர்த்திட வேண்டும்,
விழுந்து விட வேண்டும்
இந்த இரவின் கோர கனவிலிருந்து மறுமணமாகாத என்னை  எழுப்பிட
பகலே உடனே நீ வேண்டும்!!! "

- விஜய் தேசிங்

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...