freelancing writer

My photo
Am Freelance in any Area !

Tuesday, July 31, 2018

"சொல்லி தெரிவதில்லை காமம்"

காமம்  உலகில் என்னவென்று தெரியாமல் பிறக்கும் குழந்தையில்  இயற்கையுடன் காமமும் ஒரு சக்தியாக நிறைந்துள்ளது.  உலகில் பிறக்கும்  அனைத்து உயிரினங்களிலும்,  இது  இணைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
அதனால்தான் கூறுவர், “சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்றார்கள். காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தைக் கடந்து செல்ல தான்  வேண்டும்.
‘காமத்தை அடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை அடைய முடியும்’ என்று பல்வேறு மதங்கள் போதனை செய்வதுதான், இன்றைய மத குலத்தில் வளம் வரும் சாத்திரங்கலாகும்.
அதாவது, இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாகச் சித்தரித்து, அதை அடக்க வேண்டும் என்றும், காமம் ஒரு பாவம் என்பது போன்றும். சங்க காலம் தாண்டி வந்த மக்களிடம் வந்தது தான். சாதி, சமயம், பிரிவு, இதனுடன் வந்தது தான் காமம் ஒரு தீய பொருள் அது ஒரு பாவ செயல் என மூடி வைக்கப்பட்டது.  ரவிக்கை அணியாத பெண் ஆடம்பரம் என தன்னை வளர்த்தி கொண்டால், பெண் குழந்தைகளை சிறு வயதில் இருந்து மூடி வைக்க பட்டனர். ஆண்களிடம் காமம் என்ற சொல் தீய பொருளாக கற்க வைத்தனர்.  காமத்தை ஒரு சந்தோஷ அனுபவமாகக் கருதும் மனோபாவம் மறைந்து, ஏதோ விஷமாகப் பயந்து பயந்து அனுபவிக்க ஆரம்பித்தனர்  மக்கள்.
காலம் மாற தாசி குலத்தவர் பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்லப்பட்டனர். சிலர் தடை விதிக்கவும் பட்டனர். காமம் கல்வியில் ஒரு அங்கமாகவும் இருந்தது. 64 கலைகளில் மறைக்கப்பட்ட கலையாக காம் மாறியது. காமம் ஒரு இயற்கை உணர்வு அதை  அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை வரும் காலத்திற்கு கூற  கோயில் சிலைகளிலும், சாஸ்திர நூல்களிலும் காமசாஸ்திரத்தை நம் முன்னோர்கள் வடித்துவைத்திருக்கிறார்கள்.
ஆனால், இடைக்காலத்தில் சில போலி மதவாதிகள், காமத்தை அடக்கினால்தான் இறைவனை அடையமுடியும் என்று சொல்லி மக்களும் நம்பத் தொடங்கிய காலத்தில்தான் இல்வாழ்க்கை சிக்கலாகத் தொடங்கியது.
போலி மதவாதிகளுக்குப் பயந்து காமம் என்பதை தன் சந்ததி  உருவாக்க மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
20-ம் நூற்றாண்டில் காமத்தைப் பெரும் பாவம் என்று ஒரு கும்பல் உரக்கச் சொன்னாலும். காமம், மனிதர்களின் பிறப்புரிமை என்று பெண்கள் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள். காமம் பற்றி அறிந்துகொள்ள இணையத்தை  தேடி மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். நீலப்படங்கள், குருந்தகடுகள், வலைபூக்கள் என பெருகி அதில் மக்கள் நாட்டம் கொண்டனர். 
சங்க காலத்தில் காமம் கலாசாரமாய் இருந்தது, தற்போது தனக்கென கலாச்சாரத்தை உருவாக்கி ஒரு கட்டத்தில்  கலாச்சார சீர்கேடு என்று மாறி விட்டது.
மூடி வைக்க பட்ட ஒன்று காலம் ஆக ஆக வெடித்து சிதறி ஆங்கங்கே கற்பழிப்பு என சில வன்முறைகளை தூண்டுகிறது.  மேலை நாடுகளில் ஆண்கள் பெண்கள் என அவர்களின் அந்தரங்களை நாடு ரோட்டில்  விளம்பர பலகையில் காண முடியும், அதனால் அங்கும் காமம், காதல், அந்தரங்கள் அனைத்தும் பழகி விட்டன , அதனால் அங்கு குற்ற செயல்களும் குறைந்தன. ஆனால் இங்கு ஒரு பெண் இப்படி தன ஆடை அணிய வேண்டும் என்று பிறக்கும் முன்பே முடிவு செய்து விடுகின்றனர்.  கற்பழிப்பு போன்றவை நிகழ்கிறது.
சங்க காலத்தில் கற்பழிப்பு என்பவை காண அறியதவையாகும். அங்கு ஆண்கள் தங்களின் விருபத்திற்கு தாசியிடம் சென்றனர். இங்கு அந்த தொழில் செய்யும் எங்களையும் அருவருப்பாக பார்த்து ஒதுக்கி தள்ளினர். மும்பை போன்ற இடங்களில் வெளிப்படையாக நடத்தப்படும் தொழில் ஏன் தமிழகத்தில் மறைமுகமாக நடத்த படுகிறது. கேட்டால் கலாச்சாரம் சீர் கேடாம்.
அறிவியல் ஆய்வில் ஆண்களை விட பெண்களுக்கு தான் காமம் என்ற சொல்லில் முழு அளவு ஆர்வம் கொண்டவர்கள். இது நவீன காலம் மட்டுமல்லாமல் சங்க காலத்திலும் வந்துள்ளது. 
‘என் காதல் நோயின் கொடுமை அறியாமல் தென்றல் காற்று அலைக்கழிக்கிறது; அதை அறியாமல் இந்த ஊரும் உறங்குகிறது.                என் நிலையை எப்படிக் கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? கூவுவேனோ?’
என்ற அகநாநூறு பாடல் வரிகள் பெண்ணின் காமம்மிக்க மனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது.
சங்க காலத்தில் ஆண்கள் மட்டுமே, பெண் மீதான விருப்பத்தை வெளிக்காட்டுகிறான் என்றில்லை; பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தைத் தயங்காமல் வெளியிடுகிறாள்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், பாலியலை மிகவும் இயற்கையானதாகக் கருதினர். அதனால்தான் பாலுறவை காமக்கலையாக  அதாவது காமம் + கலை  என  பார்த்து, ரசித்து வாழ்ந்தார்கள்
பெண்கள் காமவயப்பட்டு, காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் பல சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
எடுத்துகாட்டாக  (பெண் லிங்கம், காமன் கவிகை, சந்திர நாடி, நகக்குறி, பற்குறி, நாபிக்குறி ,சுகக்குரல் , சம்போக சுகம் எழத் தட்டுதல் )

சங்க காலத்தில் காமம்
சங்க கால இலக்கிய நூலில் பல இடங்களில் சிற்றின்ப அடிப்படையில் பல நடைகள், பாடல்கள் இருந்தாலும் அதில் விறலி என்பது சிறப்பு முக்கது.
விறலி என்பவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண் ,  நாட்டிய கலைகளில் சிறந்த பெண், அவளை தலைவியிடம்  தூது அனுப்புவது தான் இவற்றின் சாரம்.
விறலி விடு தூதுகள் யாவும் சிற்றின்பம் பேசி, நல்லின்பம் பேண அறிவுறுத்துவது.
விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்தஆண் தன் காமத்திற்கு   தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும், நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளை விட்டு வெளியேறுதலும்,  இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். 

ஆகையால் இலக்கண நூல்களில்  விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் சிற்றின்ப வருணனை கொண்ட  பாடல்களும் கதையும் தான்  சொல்லப்படுகிறது. இறுதியில் கண்துடைப்பிற்காக  ஆணுக்கு அறிவுறுத்துவது.
ஆனால்  புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி ஆதி முதல் அந்தம் வரை விவரிபதற்காகமட்டும் தான்.
எ.கா   ரவிக்கை, பொற்சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றி விலாவாரியாக உள்ளது. 
சிற்றரசர்கள் ஒன்றாகக் கூடி சிற்றின்ப கதையை  கேட்டுச் சுவைப்பார்களாம்.
மற்றும் அடுத்தகட்ட கால நிலையில் சிற்றின்ப கதை நூல்களுக்கு பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது..
நோக்கம் சிற்றின்பம்தான் என்பது தெளிவு. நீலப்படங்கள், குறுந்தகடுகள் வரும் என எண்ணிக்கூட பார்த்திராத காலத்து காமச் சித்திரங்கள். 
தமிழ் கலாசார சீர்கேடு என்று கூறுபவர்கள் தமிழரால் கட்டப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட சிலைகள், கோவில்கள், தேர்கள் போன்றவற்றை அசிங்கம் என்று நினைபவர்கள் தான். காமம் இயற்கையில் ஒன்று. மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய ஒரு உணர்வு கர்த்தா , ஆண் பெண் என பாகுபாடு பார்க்காமல் வழங்கபடவேண்டியவை , தெரிந்து கொள்ள வேண்டியவை.

- விஜய் தேசிங்

இலக்கண குறிப்புகள்- ஆசிரியர். சுந்தர் ராஜு

Saturday, July 28, 2018

அட நம்ப பக்கத்து வீட்டு பையன்!(தனுஷ்)

தனுஷ்...! 

தந்தையோட உதவியோட திரையில வந்தவரு! அண்ணனோட உதவில மக்களுக்கு தெரிஞ்சவரு !
அவ்ளோதான் இவருடைய அறிமுகம்!

ஹீரோ னாலே கட்டுமஸ்தான உடல் இருக்கனும், அழகா பேசனும்! பத்து பேர பறக்க விடனும்! அப்படி இருந்த காலகட்டத்துல "யார்ரா இவன் தீக்குச்சிக்கு சர்ட் பேண்ட் போட்டா மாதிரி இருக்கான்" னு சொல்லி சிரிச்சாச்சு!

சரி அதையும் தாண்டி யார் இந்த மனுஷன்! திரையில பாத்து ரசித்த சில காட்சிகள் பற்றி விமர்சனம் இதோ!

1 காதல் கொண்டேன் ல, காட்டு வீட்ல திவ்யா கிட்ட "திவ்யா ஒரு ஓரத்துல நாய்க்குட்டி மாதிரி இருந்துக்கறனே" னு சொல்லும் போது, பல இளைஞர்களின் ஒருதலை காதலோட உச்சத்தை தன் நடிப்பின் மூலம் வெளி கொண்டு வந்தாரு!

2 . புதுபேட்டை ல, அப்படியே புது அவதாரம் எடுத்தாரு, ஒரு வடசென்னை ரவுடி னா இதுவரை சினிமாவுல குண்டா கருப்பா இருக்கனும் இல்லனா பலசாலி யா இருக்கனும் ற ஒரு கோட்பாடு இருந்தது,  தன்னுடைய அம்மா வ வெட்டி முடிச்ச அப்பா தன்னையும் கொன்னுடுவாரு னு ஒரு பயத்தையும்!
தன் அம்மா வ பத்தி சக ரவுடிகளோட பேசுறதும்! தன் பிள்ளைகிட்ட அப்பா கையாளதவனு வெளிகாட்டும் முகபாவனைகளும், இறுதியில் திரையரங்கை அரங்க வைத்து "தலைவா ... இமயம் சரிந்ததே!" னு சொல்ற விதமும் இன்று வரை கொக்கி குமாரின் கதாபாத்திரம் மனசுல நிக்க வைக்கும்!

3. யாரடி நீ மோகினி , " பசிக்குது" னு கேட்கும் போதும் "எனக்கு யாரும் இல்ல மா " னு சொல்லும் போது!

4. பொல்லாதவன் ல, "தொட்ரா பாப்போம், தொட்ரா" னு வில்லன ஒரு சாதாரண இளைஞன் மொறைக்கும் போது!

5. மூன்று படத்துல  இறுதி கட்டத்துல   தற்கொலைய சினிமாத்தனமாக  காட்டிட்டு இருக்கும் தமிழ் சினிமாவுல , உண்மையில் ஒரு தற்கொலை பண்றவனோட மனநிலைய காட்டிய போது!

6.மயக்கம் என்ன , ல "எனக்கு வேற எதும் தெர்யாது யாமினி இது மட்டும்" தானு தன்னுடைய கனவுக்காக கண் கலங்குன காட்சிகள்!

7. ரஞ்சனா ல, இறுதிகட்டத்துல சாகும் போது பேசிய வசனங்கள், அதனோட தோரணைகள்! நடிக்கமலே ஒரு பேச்சால கண்ணு கலங்க வைக்கும்!

8. விஜபி மொட்ட மாடில அம்மாகிட்ட பேசற காட்சி, தனக்கு வேலை கெடச்சதும் மொட்டை மாடில அழுவுறதும், இண்டர்வியூ முடிச்சுட்டு பைல் தூக்கி போட்டுட்டு அதை மறுபடியும் எடுத்து வைச்சி உக்காரதும்! தன் அம்மா இறந்ததுக்கு அப்பறம் முதலாளி பொண்ணு ட்ட "சிகரெட் பிடிச்சா எங்க அம்மாக்கு பிடிக்காது" னு சொல்ற காட்சி!

9. மரியான் ல , பார்வதி கிட்ட போன் பேசற காட்சி, கடல் ல பாத்ததும் "ஆத்தா" சொல்ற காட்சி!

10. ஷமிதாப் - படத்துல வாய்ப்புக்காக அக்ஷரா ட அழுவுற காட்சி!

இப்படி தன்னோட நடிப்புல மக்களோட உணர்வுகளையும் சேர்த்து நடிச்சுருக்காரு, அவர் அழுகுற காட்சில மக்களும் அழுகறது போல!
நடிப்புல மட்டுமல்லாம, பாடலாசிரியராக பல பாடல் இன்று வரை முனுமுனுக்கும் ,

"இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா"

"அம்மா அம்மா நீ எங்க அம்மா"
"குனியும் போது குத்தும் ஊருக்குள்ள துணை தேடி விணை தேட தேவ இல்ல"

"நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை"

"என் காதல் பாடலெல்லாம் நீதானே பெண்ணே ஓ! ஓ!"

"போ இன்று நீயாக வா நாளை நாமாக"

"தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே "

"பாத்தன் களவு போன நிலவனா பாத்தன்"

மற்றும் தயாரிப்பாளராக,

பல  கமர்ஷியல் படம் கொடுத்தாலும் (மூன்று, மாரி, தங்கமகன், விஜபி, நானும் ரௌடி தான், எதிர் நீச்சல், காக்கி சட்டை, காலா...)

விருதுகள் வாங்கும் அளவு பல தரமான படங்களும் தயாரித்து உள்ளார் .
(காக்கா முட்டை, விசாரணை...)

இயக்குனராக,

ஒரு படம்தான் எடுத்தாலும் பல நல்ல நல்ல காட்சிகள்!
குறிப்பாக,

இறுதி கட்டத்தில் , வசனமில்லாம் வரும் காட்சி!

அதுமட்டுமல்லாமல்,
சிவகார்த்திகேயன், அனிரூத், விஜய் சேதுபதி, சியான் ரோல்டன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், வேல்ராஜ், தீனா(விஜய் டீவி) போன்றவருக்கு அறிமுகமாகவும், மீண்டும் வரவும் தனுஷ் முக்கிய காரணமானவர்.

திரையில் நம்மள மாதிரி ஒரு சாதாரண ஆளு, பக்கத்து வீட்டு பையன் திரையில் வரதுனா அது நம்ம தனுஷ் தான்!

என்னத்தான் அப்பா, அண்ணன் உதவியோட வந்தாலும் இன்னிக்கு வரை அவர் துறையில ஜொலிக்குறாருனா அதுக்கு அவரோட திறமை தான் காரணம்!

வாழ்த்துக்கள்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்!
#தனுஷ்35

-விஜய் தேசிங்

Saturday, July 21, 2018

மூன்று நாள்


"இரு கால்கள் இடையே வழித்திடும் குருதி கண்டதில்லை!
இவை தவறென்று!
இருபால் உணர்ந்ததில்லை இது சரியென்று!
பல ஆண்கள் வழிநடுவே, வளர்ந்திடும்‌ இவள் நானோ?
மூன்று நாள் தீட்டென்பார் இது தானோ?

என் அப்பா உடன்பிறப்பெல்லாம்‌
ஆண்‌ என‌ சுட்டி காட்டினால் தாய்‌ அன்று!
“தொடாதே” என்று பழகிய இடமெல்லாம் குரல் அட்டை முன் வரும்! "

(விரைவில் முழு பதிவுடன் குறும்படம் வடிவில்)

Friday, July 20, 2018

பத்து ரூபாய்

சில நாள் பிறகு, அழுக்கு சட்டைகளை தோண்டி எடுத்து ,
பல வண்ண துணிகளில் இது எனதா? இல்லை நண்பனதா என்று யோசித்து
இறுதியில் இது நமது என முடிவுக்கு வந்து,
அதில் வெள்ளை விழாமல்! வாசனை வராமல் பார்த்து பக்குவப்படுத்தி,
பல்கலைகழகத்திற்கு  புறப்படும் போது, கையிருப்பில் ஒரு  ரூபாய் வைக்க வில்லை!
வார இறுதியில் இது முன்பே தெரிந்திருந்தால் ஒரு புகை சுருளை குறைத்திருப்பேன்!
விடுதியில் இருப்பவருக்கு தெரியும் அம்மாவின் பத்து ரூபாயும் அரிதென்று!
டீ கடையில் தேனீருக்கும் காசில்லை! கடனை தாண்டி தர சேட்டா-வுக்கும் மனதில்லை!
எதோ ஒரு ஞாபகத்தில் சட்டை பையில் கை துளவிய போது இருந்தது, 
கசங்கி மடிந்த சிறு கிளிசல் கொண்ட ரூபாய்!
ஊரிலிருந்து வரும் போது எத்து பள்ளு அண்ணாச்சி கடையின் செலவு மிச்சம்
பத்து ரூபாய்!


கிணறே போய் வரவா?

திருவண்ணாமலை நண்பனின் ஊருக்கு சென்ற அனுபவம் கவிதை நடையில்....

#அதிகாலையிலே வயலை நோக்கி சென்ற பட்டனத்து ரயில்!
சின்ன வரப்பு மேல சில் வண்டு மேய்ந்தது போல வரிசையாக சென்றோம்!

மறதி ஒரு சொர்க்கமடா! அன்று செருப்பு போடாமல் சென்று விட்டேன்!
நுனி புள்ளில் பனி படுத்து தூங்கும்
தெரிந்தே மிதித்தெடுத்த சென்ற போது!
 
செங்கதிர் முகத்தில் பட்டு செக்க சிவந்ததென்ன முகம்!
அடியாத்தி அன்று என் தோழியும் அழகாக தெரிந்தால்!

சூரியனுக்கு மேற்க்காயில மலைகளின் மத்தியிலே,
வாய் பொளந்து நின்றதம்மா, வற்றாத ஊற்று கிணறு !

வரவேற்றது!

பசும் பால் பீச்சும் சப்தமும், தூரத்தில் முப்பாத்தம்மா கோயில் பாடலும்,
சேவ கூட காகமும்
சேத்து வெச்ச சங்கீதமம்மா

கேட்டேன்!

நீச்சல் தெரிந்த நண்பனெல்லாம்
தொபுக்கென குதிக்க, நான் மட்டும் படியில் இறங்கினேன்,
முன்பு சென்றவரின் ஈர கால் குளிர்ச்சி
சில்லென குத்தி கிழித்தது, என் பாதங்களை!

நுனி விரல் பட்டு மயிர் கூச்சரிந்த பின் சிறு நடுக்கத்துடன் இறங்கினேன்!
கிணற்றோர தரையிலே தவளை போல் மிதந்தோம் வரிசையாக!

பற்கள் அசை போடுவதற்கு பதில் இசை போட்டது அன்றுதான்!
அடி வயிறு கலற தொடங்கியது; முங்கென முங்கினேன்!

பச்சையான நீர் நிலை! கண் இடையே சிறு தாவரமும் மிதந்தன!
சிறு குமிழி காலம் போல் உடனே எழுந்து விட்டேன்!

உயிர் பயம் ஒருபுறம் இருக்க , நண்பனின் கரங்களை ஒரு புறம் இறுக்கினேன்!

முழுவதும் நனைந்தபடி ஏறினேன்!
முழுவதும் நனைந்து படிகளில் ஏறினேன்!

உடலிலிருந்து விட்ட நீரல்லாம் ஆடை நூல் வழியே சொட்டுகிறது!

தலையில் சட்டென கொட்டும் ஷவரிலிருந்ததை விட,
அழுக்கான வாய் பிளந்த நண்பன் சிறந்தவன்!
இன்று நான் நாகரீக கூண்டுக்கு புறப்படுகிறேன்

போய் வரவா கிணறே
போய் வரவா?

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...