ஒரு குற்றவாளியை பிடிப்பதற்கு சுருளி மலைக்கிராமத்தில் மஃப்டி ல் நுழையும் இரண்டு போலீஸ். சுருளி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்கள். இதனிடையே குற்றவாளியான ஜோயை போலீஸ் அதிகாரிகள் பிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மொத்த திரைக்கதையும்.
படம் ஆரம்பத்திலே ஒரு கட்டுக்கதையை சொல்லிவிட்டு பின் திரைக்கதையை துவங்க. ஆரம்பத்தில் சொன்னதையடுத்தே திரைக்கதையும் நகர்ந்தது.
மிகவும் குழப்பமான திரைக்கதை. தலையும் இல்லை வாலும் இல்லை..அப்படி இருந்தால் இது ஒரு Time Loop என்று எடுத்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் இது ஒரு Mystery Thriller ஆகவும் எடுத்துக் கொள்ளலாம்.
படத்தில் தேவையற்ற காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. வைக்கப்பட்டுள்ளவை எல்லாம் இன்னொரு விஷயங்களுக்கு தொடர்புடையதாக இருக்கின்றது.
குறிப்பாக படத்தின் இறுதி காட்சியில் ஜோய் சொல்லும் கதை பின் நடைபெறும் சம்பவம் இருமாதிரியான கதைக்கருவை நம்மிடம் விட்டு செல்கிறது.
அதற்கு முன்பு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை படத்தை வேறுமாதிரியான பரிணாமத்திற்கு கொண்டு சென்றதற்கு அவர்களே முழுமுதற் காரணம். மேலும் படத்தில் நடித்த முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் உடன் நடித்தவர்களின் பங்கும் அளப்பரியது.
சரி கதைக்கு செல்வோம். முன்பு சொன்னது போல இரண்டு விதமாக இந்த படத்தை எடுத்து கொள்கிறேன்.
ஒன்று..
திருமேனியின் கதையை வைத்து படத்தில் யார் திருமேனி, அவரை வழி மாற்றிவிடுகிற மாடன் யார் என்ற கோணத்தில் இந்தப் படத்தை நாம் எடுத்துக் கொள்வோம்.
ஜோய் மீது சொல்லப்படும் அனைத்து குற்றங்களையும் ஷஜீவன் செய்திருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு போலீஸ் அதிகாரியை இந்த சுருளி கிராமத்தில் கூட்டி வந்து அவர்களின் நோக்கத்தை மாற்றி அழைத்து செல்கிறான். தொடர்ந்து இதே போல செய்வதால் ஷஜீவனின் நினைவுகளாக அந்த கிராம மக்களின் செய்கைகளும் ஷஜீவனை சார்ந்தே இடம்பெறுகிறது. மேலும் கிராமத்தில் இடம்பெறும் அமானுஷ்யங்கள் எல்லாம் ஷஜீவன் பார்வையிலே நடைபெறும்.
போலீஸ்காரர்களுடன் போலீசாகச் சேர்ந்து அவர்களை ஒவ்வொரு முறையும் வழி தப்பிவிடுகிற மாடனாக ஷஜீவன் இருக்கிறார்.
மேலும் போலீஸ் ஆன ஆண்டனி , வந்த வேலையை விட்டு திசை திரும்பி குடி, இறைச்சி என்று அங்கேயே எடுபுடி வேலையாட்களாக மாறிவிடுவார். அதே போல மருத்துவ பெண் "நீங்கள் போலீஸ்" தானே என்று சொல்வார். அது அமானுஷ்யங்கள் இல்லை.
ஏற்கனவே நிறைய முறை அங்கு போலீஸ் உடல் நலம் குன்றி வந்திருக்கிறார்கள். அவர்களை குணப்படுத்தி அனுப்பிருக்கிறார் அவர். மேலும் ஊர் மக்கள் ஆண்டனியை மட்டுமே கொல்ல வருவார்கள்.
இது போல பார்க்கையில் ஒட்டுமொத்த கிராமத்தினரிடம் ஆண்டனி மட்டுமே சிக்கியிருக்கிறார். இதை உணராமல் அவரை ஒரு சுழற்சி எண்ண ஓட்டத்தில் வைத்திருப்பவர் ஷஜீவன்.
மேலும் ஜோய் வீட்டுக்கு சென்று ஆண்டனி சொல்வது. "வனவிலங்குகளை கொல்வது, ஆண் பிள்ளைகளை பாலியல் தொந்தரவு செய்வது, கொலை செய்வது" என குற்றங்களை அடுக்குவார்.
ஒரு காட்சியில் ஷஜீவன் வனவிலங்கை வேட்டையாடுவார். அதில் அவரது மும்முரம் அதிகமாக இருக்கும். பின் மருத்துவச்சி வீட்டில் ஆண் பிள்ளையை வன்புணர்வு செய்திருப்பார். திருவிழாவில் போட்டியிட்டவரை கொன்றது" என ஷஜீவனை ஜோய் உடன் ஒன்றியே நகர்த்தியிருப்பார்கள்.
இறுதிக் காட்சியில் ஜீப்பில் ஜோய் இருந்த இடத்தில் ஷஜீவனை காட்டுவது இந்த கூற்றை உறுதிபடுத்துகிறது.
அதாவது ஜோய் என்ற ஒருவன் இல்லை. ஜோய் என்பவன் தான் ஷஜீவன். அந்த கிராமத்தில் ஒருவருக்கு வெவ்வேறு பெயர் இருப்பதை இரண்டு மூன்று இடங்களில் உறுதிபடுத்தியிருப்பார்.
அப்படி பார்க்கையில் ஷஜீவன் தான் ஜோய், ஜோய் தான் ஜார்ஜ், ஜார்ஜ் தான் ஷஜீவன்.
கதை சொல்லி முடிக்கும் போது ஒரு அகங்கார சிரிப்பு வரும். அதே போல ஜோய், ஷஜீவன் , ஆண்டனியும் சிரிப்பார்கள்..
இரண்டாவது கரு கூற்று :
துவக்கத்தில் வரும் திருமேனி வேறுயாரும் இல்லை. படம் பார்க்கும் நாம் தான். மாடனாக சுருளி திரைப்படம் இருக்கிறது. அடர்ந்த வனமாக திரைத்துறை உள்ளது.
திருமேனியின் தலையில் ஏற்றிய காலி கூடையை போல நம் மூளையையும் திறந்து வைத்து படம் பார்க்கிறோம். கதை எங்கு போகும் என்றே தெரியவில்லை. ஆனால் நம்மை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வழி தப்பி கொண்டே இருக்கிறது.
இது போன்ற இரண்டாவது கூற்றையும் வைக்க முடியுமே தவிர வேறுமாதிரியான அர்த்தங்களையோ பிரதிபலன்களையோ வைக்க முடியாது. படம் ஒரு Science fiction, Time loop, Mystery Thriller என பிரித்து கொள்ளலாம். 😂😂😂
என்னை பொறுத்தவரை சுருளி திரைப்படம் விமர்சனத்தை வைக்கும் விமர்சகளையும் திரைக்கலைஞர்களையும் சுற்றியே நடைபெறுகிறது.
ஒரு கலை என்பது அடர்ந்த வனம் (சுருளி கிராமம்) அதில் இறுதி காட்சியில் ஜோய் சொல்வது போல மான், மயில், குடி, இறைச்சி, வெடி உண்டு. ஏன் பெண் கூட உண்டு இங்கு கொலை கூட செய்யலாம். அதாவது சுதந்திரமாக வாழலாம். இதை அனுபவிக்காமல் முன் அனுமானங்களுடனும் தீர்மானங்களுடனும் இங்கு நுழையாதீர்கள்.
அதே போல ஒரு படைப்பு என்பது எண்ண ஓட்டத்தை தாண்டி அனுபவத்தை கொடுக்ககூடியது. அதிலிருந்து அறிவுரையோ நீதியையோ எடுத்து சொல்ல வேண்டும் என்று நிர்பந்திக்க வேண்டியதில்லை.
அப்படி தேடி போகையில் நாமும் அதில் தொலைவோமே தவிர அதிலிருந்து வெளிவர முடியாது..
ஹா... ஹா.. ஹா.... ஹா...
- விஜய் தேசிங்

No comments:
Post a Comment