freelancing writer

My photo
Am Freelance in any Area !

Sunday, October 3, 2021

மோகன் ஜி - ன் ருத்ர தாண்டவம் ஒரு பார்வை



பட்டியலின இளைஞரை தாக்கி அவர் இறந்து போக காவல் ஆய்வாளரான ருத்ரன் ( #RichardRishi ) மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்(PCR act) கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 

ஒருகட்டத்தில் இறந்த இளைஞன் 
பட்டியலினத்திலிருந்து மதம் மாறியவர் என்பதால், தன் மீது இருந்த வழக்கு செல்லாது என அதற்கு எதிராக ஆய்வாளர் ஒரு வழக்கைத் தொடர்கிறார்.

அந்த வழக்கிலிருந்து தப்பித்தாரா இல்லையா? என்பதும் இதற்கு நடுவில் போதை பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவது அதை தடுக்க ரிச்சர்ட் ரிஷி எடுக்கும் நடவடிக்கைகள் தான் 
படத்தின் மீதிக்கதை. 


கிருஸ்தவ மதத்தினர் மற்ற மதத்தினரை மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு கருத்தியல் இருக்கு..

ஒரு மதத்திலே இருக்கறதும் ஒரு மதத்தின் கலாச்சாரம், வன்கொடுமை, ஒடுக்குமுறை தாங்காமல் மற்றொரு மதத்திற்கு மாறுவதும் அது அவரவர் விருப்பம். இது ஜனநாயக நாடு. 

கதையில் இளைஞன் மாறினான் என்பதற்கு பொதுவாக அந்த மதத்தை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? 

இந்திய சட்டம் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிறைய சட்டங்கள் இயற்றியுள்ளது அதில் சிலவை மட்டுமே சரியாக பயன்படுகிறது. அப்படி பயன்படும் PCR ACT - ஐ சரியான புரிதல் இல்லாமல் தற்குறியா இயக்குனர் இந்த கதைய எழுதிருக்காரு.  

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தபடுகிறது என்ற சிறிய நிகழ்வுகளை வைத்து ஒட்டுமொத்த வரைவுகளையும் கொச்சைபடுத்துவது அபத்தம். 

படத்தில் சட்டத்தை திருத்தி எழுதவும் அதற்கு குழு போடவும் நீதிபதி முடிவு சொன்னாலும்.. படம் பார்த்து வெளிவர மக்களுக்கு அந்த சட்டம் தவறானது என்ற எண்ணத்தையே கொடுக்கிறது. 

The Civil Rights Act of 1964 prohibits discrimination on the basis of race, color, religion, Caste, sex or national origin

சமூக நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்க கூடிய சாதி, மதம், இனம் பாகுபாடுகளை தடுக்க வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. 

இதை சாதாரணமாக கடந்து போக கூடிய சட்டம் இல்லை. இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை ஓரளவு காப்பாற்றி வருகிற சட்டம். அதை பொதுவெளியில் வேறுமாதிரி சித்தரிப்பது எந்தவகையில் சரியாக இருக்கும். 


மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கதைக்கு ஒட்டாமலே காட்டமாக தாக்குவதும் சித்தரிப்பதும் அருவருப்பை கொடுக்கிறது. 

அதுவும் #YGMahendran #RadhaRavi மூலமாக அந்த வசனங்களை கொடுப்பது இன்னும் மோசமாக இருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்துக்குடா வடசென்னை மக்களை போதை பொருள் கடத்தல்காரர்களாகவும், கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து பன்றவங்களாகவும் காட்டுவீங்க..

ச்ச ச்ச ச்ச நச நசநசனு.. காட்சிக்கு காட்சி.... இதுல ஈழம் வேற தமிழ்சினிமா நடுவுல மாட்டிக்குட்டு இருக்கு..

இதுல குறியீடு லட்சனம்.. தமிழ்சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக குறியீடு என்ற பெயரில் இயக்குனர் அதை சிந்திப்பதும் பார்வையாளர்கள் அதை தோண்டி எடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. 
இந்த படத்திலும் குறியிடு ன்ற பேருல போட்டோ கடை வெச்சிருக்காரு இயக்குனர். 

அண்ணா துரை, காமராஜர், வாஜ்பாய், நேதாஜி, காந்தி, அம்பேத்கர், பாரக் ஒபாமா, ஜான் எஃப் கெனடி, பாரதியார்,

வசனங்களில் முத்துராமலிங்கம் ஐயா புகைப்படமும் வெச்சிருக்காரு (இன்னும் அடையாளம் காணமுடியாத சிலரின் புகைப்படமும்) 

கதை வில்லனுக்கும் கதாநாயகனுக்கு நடக்கும் ஒரு Tom & Jerry Concept னும் சொல்ல முடியாது. 

ஏன்னா வில்லன் எப்போனா தான் வருவாரு. அப்பறம் கடைசில செத்து போயிடுவாரு.. 

முதல் பாதியில் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் கதாநாயகன் இரண்டாம் பாதியில் தன்னையும் தன் நல்ல பெயரையும் காப்பாற்ற போராடுகிறார் இதுதான் படத்தோட கதை. 


திரைக்கதை ரொம்பவே மெதுவாக நகர்கிறது. மோலோட்டமாக பார்த்தால் படம் சுமாரான படம். இயக்குனரின் முந்தைய படங்களை விட இந்த படங்களில் Technically Improvement இருக்கு.‌

பிண்ணனி இசை நல்லா இருக்கு.. ஆனா சில இடங்களில் அது அடிக்கடி வருவது போல இருக்கு.. 
ஆனா குறை சொல்ல அது இங்க பிரச்சனை இல்லை..

பூனைக்கு கோடு வரைஞ்சா பூனை னு தான் சொல்ல முடியும் புலி னு சொல்ல முடியாது. 

அது போல தான் என்னதான் improvement இருந்தாலும் Data & Information எடுக்குறதுல இயக்குனர் இந்த முறையும் கோட்டவிட்டுருக்காரு. 

மேலோட்டமான தகவல்களை வைத்தும் வாட்ஸ் ஆப் ல் வலம் வரும் விஷம கருத்துக்களுக்கு கோபபட்டு இந்த படத்தை எடுத்தது போல இருக்கு. 







No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...