ஒன்றிய வீட்டோடு ஒட்டி
ஓடிட்ட வீடாய் இருந்தது என் வீடு,
கணவனோ, புகைபடமாய் செவிற்றில் அடிக்கபட்டு இருக்கிறான்.
ஊதுபத்தி வாசம், மலர் பிதுங்கி
புகையாய் வழிந்தது.
காய்ந்த பூக்கள் உதிர்ந்த நிலையில்
புகைபடத்தில் ஒரு புறமாய் தொங்கி கிடக்கின்றன.
வீட்டில் புத்தகத்திற்காக ஒதுக்கப்பட்ட
ஒரு அறை இருக்கும்.
ஒரு ஆள் நிற்கும் அளவு இடம் இருக்கும்.
அவனோடு நானிருந்த பொழுது
என் கால்கள் இடித்து
புத்தக அடுமணை அலுங்கி விழுந்தது.
அதில் பெண்ணுரிமை, சுய மரியாதையெல்லாம் சரிந்து விழுந்தது.
அவனை அனுப்பி விட்டு,
கணவன் முன் வைத்த இரண்டாயிரம் ரூபாய் கட்டு மெதுவாய் பிரிந்தது.
அந்த நேரமே, கதவு வழி சப்தம்,
பள்ளி முடிந்து சென்று வந்த பிள்ளையின் ஆனந்த வருகை,
'அம்மா பசிக்குது' என்றான்.
சோறு பரிமாறி, குப்பை கொட்டி விட சென்றேன்!
இன்று அந்த மேலறயை,
சுத்தம் செய்து விட்டேன்,
அன்று அவன் தவற விட்ட ஆணுறையின் சுருளை,
'அம்மா ஊதி கொடுமா' என்ற கேள்விக்கு
இரத்தம் உறையா வலியுணர்ந்தேன்!
என்றைக்கு அவனுக்கு விடை தெரியுமோ,
அன்றைக்கு குப்பை கூளங்களாய் மாறாமல் இறந்துவிட தோன்றியது.
- விஜய் தேசிங்


No comments:
Post a Comment