freelancing writer

My photo
Am Freelance in any Area !

Saturday, October 13, 2018

தூமை துணி


இரண்டு குடகு பாதை இடையே போர்த்தப்பட்டிருந்த
உள்ளாடையின் விரும்பி நான்!
தாயின் பயம் கலந்த பொத்தடைப்பிற்கு ஆளான
நூற் வானம் நான்!
ஈரமான போதும், வழிந்து விட்டதா,
அல்லது விலகி விட்டதா என அவள் கண்கள் பதற்றும்
ஓரங்க தோழி நான்!
செங்கதிர் சூடடங்கி பொங்கிடும் செக்க சிவப்பெல்லாம் கக்கி 

கசிந்திட்ட  யோனியின் மறை போர்வை நான்!
ஆதிக்க மகுடத்தின் மூன்று நாள் உயிர் பூச்சி நான்!
சமயங்களில் சிக்கி நூலுக்கு பயந்திட்ட நூலாடை நான்!
முலை பெருக்காத சமயங்களில்
மூலையில் முடங்கிய முதிராத குணம் கொண்டவளின் மூகம் நான்!
துணியாத பெண்டிர் சமூகத்திடம் ஓய்வு பெறா தூமை துணி நான்!

- விஜய் தேசிங்

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...