freelancing writer

My photo
Am Freelance in any Area !

Thursday, August 5, 2021

மாணவர் மஞ்சரி : சார்பட்டா திரைப்படம்

சார்பட்டா பரம்பரை படத்தில் பட்டையை கிளப்பிய "வானம் விடிஞ்சிருச்சு" பாடலில் ஒரு காட்சியின் பிண்ணனியில் இருக்கும் சுவரில் "மாணவர் மஞ்சரி" என்று பெயர் குறிப்பிட்டிருக்கும். 


சரி அதென்ன மாணவர் மஞ்சரி ?? 

மாணவர் மஞ்சரி என்பது நூலகம், மாலை பயிற்சி வகுப்பு, அரசுப் பணி போட்டித்தேர்வு வழிகாட்டி ,என பலநோக்கு கொண்ட அமைப்பு, சென்னையின் குடிசைப்பகுதிகளில் ஏழை ஆதி திராவிடர் மாணவர்களின் மேம்பாட்டுக்கு உதவிய இயக்கம் இது. 

இந்த அமைப்பினர் அரசு பள்ளிகளுக்கு சென்று ஆதிதிராவிட மாணவர்களுக்கு அம்பேத்கர் அறிவியல் கைட், தமிழ், கணித பாட கைடுகளை ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக தருவது வழக்கம். 

நலிந்த மக்களின் பிள்ளைகள் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண ஹார்பர், ரயில்வே, ஐசிஎஃப், காவல்துறை, விளையாட்டு , கல்வி துறைகளில் சாதிக்க அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அமைப்பு இருந்தது. 

பா.‌ரஞ்சித் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு செயலிலும் வீணாகாமல் மக்களுக்காக இயங்கிய இயங்கும் செயல்பாட்டினை விளக்கியதில் பாராட்டுக்குரியது. 

தொண்டர்களுக்கு பச்சை குத்திக் கொள்ள வலியுறுத்திய எம்.ஜி.ஆர் - சார்பட்டா திரைப்படம்

சார்பட்டா படத்தில் ரங்கன் வாத்தியார் ஒரு திராவிட முன்னேற்ற கழகத்தின்  உயிர் தொண்டனாக இருந்தாலும் அவரது மகன் வெற்றிச் செல்வன் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனாக இருப்பார்.  




கபிலன் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் போட்டோ கொடுப்பது போன்ற காட்சிகளாலும் படத்தில் பிற்பகுதியில் எம்.ஜி.ஆர் - ன் கட்சியில் இணைந்தது போல காட்சி அமைந்திருக்கும்.  

அ.தி.மு.க., நிறுவனர் தலைவர், எம்.ஜி.ஆர் அப்போது தன் தொண்டர்கள் கட்சி தாவுவதை தடுக்க தன் கட்சி சின்னத்தையோ அல்லது அவரது படங்களையோ பச்சை குத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.இந்த செய்தி எந்தளவு உண்மை என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இன்றும் மூத்த அதிமுக தொண்டர்களின் கைகளில் இரட்டை இலையோ அல்லது கொடியோ பார்க்க முடியும். 

ரங்கன் வாத்தியார் மகன் வெற்றிச்செல்வன் அஇதிமுக- வில் இணைந்த பின் , எம்.ஜி.ஆரின் ஆணைப்படி பச்சை குத்தி கொண்டிருப்பார். 

எம்.ஜி.ஆர் படங்களில் அவரது ஆடைகளுக்கு மிகுந்த கவனம் கொடுப்பார். எப்படி கமல் ஹாசன் ரஜினிகாந்த் 80 களிலும் கவனம் செலுத்தினாரோ அதே போல் அப்போது எம்.ஜி.ஆர் இருந்தார்.அவருடைய அன்றைய trend setting Costume Tight Fit சட்டை. மீனவ நண்பன் படம் முழுவதும் எம்.ஜி.ஆர் இப்படிதான் வருவார் அதையே வெற்றிச்செல்வனும் பிற்பகுதியில் கடைபிடித்திருப்பார். இது போல் ஆய்வு செய்து காட்சியமைப்பிருப்பது நேர்த்தி. 

மீண்டும் ஒருமுறை சார்பட்டா படத்திற்கு பாராட்டுக்கள். 






Monday, August 2, 2021

நிழல் நிஜமாகிறது - கே. பாலசந்தர்


                படத்தின் போஸ்டர் 

வீட்டு வேலைக்காரியான திலகத்தை (ஷோபா) அந்த வீட்டின் உரிமையாளரான  வெங்கடாசலம் (சந்திரபாபு)  ஏமாற்றி  கர்ப்பமாக்கி விடுகிறார். வீட்டையே கட்டி ஆளும் தன் தங்கை இந்துமதிக்கு (சுமித்ரா) தெரிந்து விடும், இந்த சமூகத்திற்கு தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று பயந்து இன்னொரு வேலைக்காரன் (செவிடன்) மீது பழி போடுகிறான். 


இந்த கர்ப்பத்திற்கு காரணம் தன் நண்பன் வெங்கட் தான் என்று தெரிந்து கொண்டு திலகத்திற்கு உதவுகிறார் வெங்கட் - ன் நண்பர் சஞ்சீவி (கமல் ஹாசன்) 

இதற்கிடையே இந்துமதிக்கும் சஞ்சீவிக்கும் இடையேயான இடது வலது காதல் கதை. பழியை சுமக்கும் அப்பாவி செவிடன் கதை. 

இறுதியில் இவர்களின் உறவுகளில் என்னென்ன மாறுதல்கள் நடந்தது என்பது தான் மீதிக்கதை. 

படத்தில் கம்யூனிஸ்ட் தோழராக கமல் ஹாசன் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் பிரமாதம்.கமல் இதில் எல்லா காட்சிகளிலுமே சிகரெட்டுடன் தான் இருப்பார். கூடவே வறட்டு இருமலையும் அழகாக வசனத்தினூடே பயன்படுத்திருப்பார். கே.பி யும் கமல் ம் சேர்ந்தால் கிடைக்கும் அழகியல் அது.  16 வயதினிலே போல ஒரு கதைக்களம் என்றாலும் கே.பி க்கே உரித்தான சாயல் இந்த படத்தில் காணலாம். 

அந்த காலக்கட்டத்தில் வந்த படம் என்றாலும் நிறைய இடங்களில் முற்போக்குதனம் இருந்தது. 

ஒரு பெண் இறுதி காட்சியில் சுயமாக ஒரு முடிவை எடுத்து  முற்போக்கு தனத்தை காட்டி பார்வையாளர்களின் கைத்தட்டலை வாங்குகிறாள். அதே நேரத்தில் இந்துமதி கதாபாத்திரம்  சுயமாக சிந்தித்து நடந்ததினால் அதற்கு பெயர் அகம்பாவம். அவள் பெட்டி பாம்பாய் சஞ்சீவியுடன் சென்றதற்கும் பார்வையாளர்களிடம் கைதட்டல் வாங்குகிறாள்.  படத்தில்  இதுபோல சில சில இடங்களில் பிற்போக்கு தனமும் இருந்தது. அதெப்டி வாத்தியார் னால ரெண்டு கருத்துக்களை கொடுத்து கைத்தட்டல் வாங்க முடியுது னு தெரில.. 

16 வயதினிலே படம் பார்த்து பாரதிராஜா வை நெகிழ்ந்து பாராட்டிய கே.பாலசந்தர்.  அதே பாணியில் அவருடைய கருத்துக்களை இடைசெருகி கொடுத்த படம் தான் நிழல் நிஜமாகிறது. கலர் திரைப்படமான 16 வயதினிலே படத்திற்கு பிறகு  கருப்பு வெள்ளையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. 






Sunday, August 1, 2021

தந்தைக்கு முலைப்பால் கொடுத்த மகள் : ரோமன் சாரிட்டி எனும் கதை

              ரோமன் சாரிட்டி ஓவியம் 



சமீபத்தில் கே.பாலசந்தர் அவர்களின் கல்கி திரைப்படம் பார்த்தேன். 

வழக்கமாக பாலசந்தர் படங்களில்   உலக சினிமாவை பற்றியோ உலக இலக்கியங்களை பற்றியோ அல்லது நடப்பு அரசியல் குறித்தோ ஒரு துணுக்குகளை திரைக்கதையில் அவர் வைப்பதுண்டு.. அப்படியே இந்த படத்திலும் ஒரு துணுக்கு என்று சொல்லலாம் அல்லது தகவல் என்று சொல்லலாம்.. 


கல்கி திரைப்படத்தில் ஒரு காட்சியில் எஜமானி செல்லம்மாவிடம் பணிப்பெண் கோகிலா, 

கதாநாயகி ஒரு அந்நியனை கட்டியணைத்து முத்தம் கொடுத்ததை நியாயப்படுத்த ஒரு கதையை மேற்கோள் காட்டுவாள்.

"தாகத்தில் செத்து கொண்டிருந்த ஒரு அந்நியனுக்கு ஒரு தாய் சட்டுனு breast feed செஞ்சு காப்பாத்துனா..."  னு வசனம் வரும்.. 


இந்த கதையின் பிண்ணனியயை தேடி பார்க்கையில் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் நாட்டின் கதை உதாரணமாக கிடைத்தது. 

அக்கதை, ரோமில் சிமோன் எனும் குற்றவாளிக்கு பட்டினி கிடந்து சாகுமாறு தண்டனை விதிக்கப்படுகிறது. தன் தந்தையைக் காப்பாற்ற பெரோ என்ற அவரது மகள்.  சிமோனை தினமும் சிறைக்கு சென்று அவரது பட்டினியை போக்க  தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றி வருகிறார். அப்படி ஒருநாள் தந்தைக்கு  பால் கொடுக்கும் போது சிறைக்காவலனிடம் பிடிபடுகிறாள். 

பின் அந்த பெண் மீது நீதிமன்றம் விசாரணை வைக்கிறது. அந்த பெண்ணின் இந்த செயல் தன்னலமில்லாத கருணையை வெளிபடுத்துகிறது என்று நீதிமன்றம் புரிந்து கொண்டு அவளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி தன் தந்தை சிமோனையும் விடுதலை செய்தது.
 
இந்த கதையை தழுவி நிறைய உதாரண கதைகள், நிறைய நவீன ஓவியங்கள் , சிலைகள் , சினிமா என ஏராளமான படைப்புகள் வந்துவிட்டது. மேலும் இந்த படைப்பு கலைக்கு ஆபாசம் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறது..

அதையே தான் கல்கி படமும் கூறுகிறது. இந்த சமூகம் எதை ஆபாசம் என்று கூறுகிறதோ அதை உடைத்து ஒரு செயலை வெளிபடுத்துகிறது. 

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...