freelancing writer

My photo
Am Freelance in any Area !

Friday, October 24, 2025

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. 

என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் கதைதான் இது. 

ஆங்கிலேயர்களை திக்குமுக்காட வைத்த மருது சகோதரர்களை காட்டி கொடுத்தால் அதிக வரிவிதிப்பு இல்லாமல் குத்தகை நிலங்களை பரிசா கிடைக்கும். அதனால் நாட்டாமைகள் மருது சகோதரர்களை காட்டி கொடுக்கின்றனர். 

இரவோடு இரவாக மருது சகோதரர் இளைப்பாறி கொண்டிருந்த கோட்டை திடீரென தாக்கப்படுகின்றது. அந்த தாக்குதலில் தனித்தனியாக பிரிந்து செல்கின்றனர் மருது சகோதரர்கள். 

மருதிருவர் தனித்தனியாக பிரிந்த நிலையில், சின்னமருதுவுடன் கறுத்தான் என்பவனும், ஒரு சிறுவனும் தங்கியிருக்கிறார்கள்.கறுத்தான், இளைய மருதுவைப் பிடித்துக் கொடுக்க, ஆங்கிலேயத் தளபதி அக்கினியூவை ரகசியமாகத் தொடர்பு கொள்கிறான். 

அதன்படி, தூங்கிக் கொண்டிருந்த இளையமருதுவை கறுத்தான் துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேட்டையாட வந்த யாரோ சுட்ட தோட்டா, மருது மீது பாய்ந்துவிட்டதாக நாடகமாடினான். 

காயமடைந்த சின்ன மருதுவை, கூலிப்படையினர் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைகின்றனர். அதன் பின் சின்ன மருது சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பெரிய மருது திருப்புவனம் அருகே உணவும், உறக்கமும் ஓய்வும் இன்றி சுற்றித்திரிகிறார்.

பெரியமருது இருக்கும் இடத்தையும் கருத்தான் காட்டி கொடுக்க ,பெரிய மருதுவையும் சுற்றிவளைத்துப் பிடிக்கின்றனர். 

அதன்பின் மருதுபாண்டியர்கள் இருவரும் திருப்பத்தூர் கோட்டையில் துரோகக் கும்பலால் தூக்கிலிடப்படுகிறார்கள். 

அவர்களுடன் ஏறத்தாழ 500 போராளிகள் தூக்கிலிடப்பட்டு, அவர்களது தலைகள் கொய்யப்பட்டு அந்த தலைகள் கம்பங்களில் காட்சிப் பொருட்களாக சொருகி வைக்கப்பட்டன

எத்தனை வீரம் இருந்தால் என்ன? துரோகங்களை தமிழர்களுக்கு எதிர் கொள்ள தெரியவில்லை என்பதே உண்மை!  

தேசத்தின் மானம் காத்த மருதிருவர் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று

அக்டோபர் - 24


துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...