freelancing writer

My photo
Am Freelance in any Area !

Friday, September 30, 2022

மாபெரும் கனவை மெய்பட செய்த மணிரத்னம் : பொன்னியின் செல்வன்: பாகம் 1

சோழ சாம்ராஜ்யத்தின் அரசர், இளவரசர்களை சூழும் வஞ்சகம்.. அதன் பிண்ணனி என்ன? வஞ்சத்தால் என்ன ஆனது சோழ ராஜ்யம் என்பதே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மீதிக்கதை. 

கோடிக்கனக்கான பிரதிகளை விற்று வெற்றி பெற்ற நாவலை படித்த வாசகர்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் ஒரு இயக்குனர்களாகின்றனர்.

அவ்வழியே இந்த படத்தை புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்து விமர்சிப்பது அபத்தம். 

முடிந்தவரை நீண்ட நாவலை சுருக்கி திரைக்கதை அமைப்பது கடினம். அப்படி சுருக்கியதை காட்சியமைப்பதும் கடினம்.  
பிரம்மாண்ட நாவலை சீரழிக்காமல் அழகாக திரைக்கதை அமைத்திருக்கின்றனர் #Manirathnam , #IlangoKumaravel ,  #Jayamohan .

தயாரிப்பாளர் மணிரத்தினம் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 

வாசகர்களின் கற்பனை ஓட்டத்தை முயன்றளவு எட்ட முயற்சித்திருக்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் மிக முக்கியமான பலம். கதாபாத்திரத்தை கச்சிதமாக அரங்கேற்றிய அனைத்து நடிகர்கள்.

ஆதித்த கரிகாலனாக  #ChiyanVikram - ன் ஆவேசமும், தன் காதலியை நினைத்து உருகும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறார். 

வாளிலும் வார்த்தையிலும் மிடுக்கிடும் வந்தியதேவனை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் #Karthi . கிட்டத்தட்ட பெண்களிடம் உருகும் போது #AayirathilOruvan (முத்து) நினைவில் வருகிறார். 

பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி? என்று விமர்சித்தவர்களை ஆச்சரியமூட்டுகிறார் #Jayamravi . அவ்வளவு நேர்த்தியான பொருத்தம். 

#Aishwaryarai  frame ல் வரும்போதெல்லாம் அவ்வளவு அழகு திரைக்கு அப்பால் இருப்பவரை நடிப்பினாலும் அழகினால் மயக்குகிறார். 

#Thrisha அழகும் ஐஷ்யவர்யா ராயின் அழகும் #Kalki  - ன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. குறிப்பாக இருவரும் எதிரெதிரே சந்திக்கும் காட்சி Goosebumps. பூங்குழலியாக வரும் #Aishwaryalakshmi கடலுடன் கவர்கிறார். பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம். அப்படியொரு உயிரோட்டத்தை கொடுத்துள்ளார் ஜெயராம். இவர்களுடன் #PrakashRaj #parthiban #Rahmam #Kishore நடிப்பினால் கவனம் ஈர்க்கின்றனர். 


வசனங்களில் ஈர்க்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். காதல் வலியும் வெற்றியின் களிப்பும் தலைக்கேறிய இளவரசனின் ஆட்டம் அதுனூடே குட்டி பிளாஷ்பேக்  காட்சியமைத்தது அருமை.

தோட்டாதரணியின் கற்பனை வளம் படத்தை மேலும் மெருகூட்டி தரப்படுத்துகிறது.  இதனுடன் 
கண் இமைகளை மூட விடாமல் ரசனைக்கு உட்படுத்தும் காட்சிகளை கொடுத்ததில் ரவிவர்மனின் வேலைபாடு அளப்பரியது. குறிப்பாக க்ளைமேக்ஸ் கப்பல் காட்சி, விக்ரமின் பால்ய வயது காதல் கதை காட்சியமைப்பு.  

எந்தளவு மணிரத்னம் குழுவினர் களத்தில் வேலை பார்த்துள்ளாரோ அதற்கு நிகராக #ArRahman அந்த வேலையை அழகுப்படுத்தி அந்த கதையை உணர வைக்கிறார். காட்சிக்கு காட்சி வியக்க வைக்கும் பிண்ணனி இசை. 

ஹாலிவுட் படங்களை வியந்து பார்க்க முக்கிய காரணம் அதன் பிண்ணனி இசை.  அந்த இசையே காட்சியின் 
குணாதிசயத்தை கொடுத்து செல்லும் 
ஆனால் அதை பெரும்பாலும் கவனிப்பதில்லை. அது போலவே இந்த படத்தில் பல நுனுக்கமான வேலைகளை செய்துள்ளார் #Arrahman

கதை வாசிக்காதவர்களின் அடிப்படையில் 5 பகுதி நாவலை 2 பகுதியாக சுருக்க நிறைய காட்சிகளை முழுமையாக்காமல் கத்தரித்துள்ளனர்.
(வேறுவழியில்லை..) சில இடங்களில் CG ஒட்டாமல் இருக்கின்றது. ட்ரைலரை காட்டிலும் பரவால்ல..

மொத்தத்தில் படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும்.. வாசகர்கள் தங்கள் கற்பனை எதிர்பார்ப்பை கொஞ்சம் தாழிட்டு வந்து படம் பார்த்தால் நல்லது. 
கல்கி எனும் மாமனிதரை 20K பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி தேடி பார்க்க வைத்துள்ளார் மணிரத்தினம். 

மாபெரும் கனவை மெய்பட செய்ய தமிழ்சினிமாவே முயன்றது. இன்று அந்த பெருங்கனவை நிறைவேற்றிய மணிரத்னம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...

- விஜய் தேசிங் 

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...