மீனவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க மீன்வளத்தை மேம்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கமாகவும் அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியும் உருவாக்க வேண்டும் என்று 1985 – 90 காலத்தில் தமிழகத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ‘நீல் கிராந்தி’ எனப்படும் நீல புரட்சி.
போன்ற நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இன்று இதன் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு 60,000 டன்கள் மீன் உற்பத்தி என்ற வரம்பிலிருந்து 1.6 மில்லியன் டன் மீன்கள் உற்பத்தியை எட்டியுள்ளது. மீன் மற்றும் மீன் பொருட்களின் உற்பத்தியில் உலக சராசரியான 7.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியா 14.8% சராசரி ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி ஒருபுறம் இருக்கையில் இதனால் ஆரம்பத்தில் பயனடைந்தவர் ஏராளாம் அதன் பின் நடந்தது என்ன?
மீன் தொழில் முறைகளை நவீனமயமாக்கி அங்கிருந்து
மீனவர்களின் வாழ்வியலில் நவீனத்தை புகுத்திய இந்த நீல புரட்சி மீனவர்களிடம்
நைலான் வலைகள் மற்றும் விசைப்படகுகளை முன்வைத்து வாங்குமாறு மீன் வளத்துறை நிர்பந்தித்தது. இந்த தொழில் வளர்ச்சி காரணமாக
உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட சாதனங்களை வாங்கி கடனாளி ஆனது
தான் இந்த திட்டத்தின் முடிவாக இருந்தது.
அது மட்டுமா இந்த திட்டத்தின் மூலம் பல கருவிகள் வாங்கப்பட்டு அதன் மூலம் மீன்
தொழில் செய்த மீனவர்கள் கடல் வளத்தை அவர்களுக்கு தெரியாமல் அழித்ததும் இந்த
நிகழ்வில் அரங்கேறியது தான். (உ.தா)
இரட்டை மடி வலை.
முன்பு நான் செய்த கள ஆய்வு மற்றும் நேர்காணலில் தமிழ்நாட்டில் மீன்பிடி தொழில் செய்யும் பலர் இரட்டை மடி வலை, சுருக்கு வலை பயன்படுத்தி மீன்களை அள்ளி செல்கின்றனர். இந்த வலையினால் மீன்கள் அதிகம் கிடைக்கின்றது என்பது உண்மை தான், ஆனால் சரியாக வளராமல் இருக்கும் மீன் குஞ்சுகளையும் பொரிய தயாராக இருக்கும் முட்டைகளையும் மொத்தமாக சுருட்டி எடுத்து கொள்கின்றது இதனால் மீனவர்கள் மாதத்தில் முதல் வாரம் கிடைக்கும் வருமானம் இரண்டாவது மூன்றாவது வாரம் கிடைக்காமல் போகின்றது காரணம் மீன் வளத்தை ஒரேடியாக எடுப்பதினால். மேலும் இது போன்ற வலைகள் மீன்களை மட்டுமல்ல மீன்களின் வாழ்வாதரமான கடல் தவாரங்களையும் அழிப்பதால் மீன்களின் பெருக்கம் குறைந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வருகின்றது. அண்டை நாடான இலங்கையிலும் பெரும்பாலான பொருளாதாரம் மீன் தொழிலை சார்ந்தே உள்ளது அங்கு மீன்வளத்துறை இரட்டை மடி வலை பயன்படுத்துவது குற்றமாக அறிவித்துள்ளது மேலும் அந்த நாட்டு மீனவ இனகுழுவும் அந்த வலைகளை பயன்படுத்துவதில்லை.
மேலும் நீல புரட்சியில் எந்திரங்களை வாங்க வேண்டிய சூழலால் முதலீட்டுக்கு கடன் வாங்கும் சூழலில் மீனவர்கள் தள்ளப்பட்டு பெரும்பாலான மீனவர்கள் கடனாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கண்ணாடியிழைப் படகுகள், பிளாஸ்டிக் கட்டுமரங்கள், ஸ்டீல் படகுகள் மற்றும் இயந்திர மோட்டர்களையும் அறிமுகபடுத்தி அதன் வளர்ச்சியை உருவாக்கிய இந்த நீல புரச்சி, மரபு மாராமல் தொழில் செய்ய தேவைப்படும் கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், நாட்டுப் படகுகளைத் தங்கள் கைத்தொழில் நுட்பத்தால் உருவாக்கிய மீனவக் கலைஞர்களையும் கைவினையாளர்களையும் நீலப்புரட்சி அழித்தது.
‘நாட்டின் முதுகெலும்பு விவசாயம்’ என்று மகாத்மா சொன்னது விவசாயத்தை மட்டுமல்ல
உணவை விளைவித்து அதனை உற்பத்தி செய்தும் இயற்கையில் கிடைக்க கூடிய உணவுகளை
சேகரிக்கும் தொழிலையும் குறிக்கும். அந்த வகையில் மீன் தொழிலும் நாட்டின் முதுகெலும்பாகவே
உள்ளது.
விவசாயத்தை போலவே இந்தியாவில் பல தொழில்கள் கவலைக்கிடமாகவே உள்ளது. இதில் மீன் தொழில் ஒன்றும் விதிவிலக்கல்ல. மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதும் அவர்களை கடனாளியாக மாற்றுவதே அரசு மற்றும் பெரிய முதலாளிகளின் வேலையாக இருந்து வருகிறது. மக்களுக்கு பயன்படாத சட்டம் பயனற்றது. மேலும் மக்களுக்கு ஆரம்பத்தில் பயனளித்து பின்னாளில் சுமையாக மாறும் அரசு திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே உழைக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தியாவில் நீல புரட்சி போன்று பல புரட்சிகள் துவக்கத்தில் இருந்ததை காட்டிலும் இன்று கேட்பாரற்று உள்ளது. இந்த நேரத்தில் பிரபல நடிகர் புரூஸ் லீ – ன் பொன்மொழியை நினைவு கூற விரும்புகிறேன்.
“ஒரு வேலையை துவங்குவதற்கு முன் அதில் வைக்கும் ஆர்வத்தை விட அந்த வேலையை
துவங்கிய பின் வைக்கும் அக்கறையே வெற்றியை தீர்மானிக்கும்”
- விஜய் தேசிங்

