freelancing writer

My photo
Am Freelance in any Area !

Sunday, November 19, 2017

இரவலாக என் கவிதை உன்னிடம்

என் தலையணை அறியும். நீர் துளியே
இரவில் கேட்கும் போர்வை பூவையே!
இறந்து கடந்த இரண்டாம் பாகம்
இயங்க கண்டேன் கார் மேக விழியில்
நடந்து நடந்து நகர்கிறது இந்த இறவாக்காலம்
நகர மறுத்து விடுகிறது இந்த பொன்மாலை பொழுதுகள்!
கண்களில் விழுந்திடும் கவர்ச்சி பிணங்களை கடந்தும்
கழுத்திலிருந்து இறங்க நினைக்க என் கண்களும் கவிழ்கிறதே!


கண்ணருகே நீ இருக்க கண் மூடாமல் இருக்கின்றேன்!
கசந்திட நீர் வழியே நீ வராமல் காத்திருக்க
இருள் விழியும் அசையாமல் நின்றதடி!
என் கைப்பேசி கவிழ்கிறதே! உன் குறுஞ்சேதி காணாமல்
பகடிகளில் பதிய மறுக்கிறதே என் சிரித்த முகம்!
சித்தரிக்கும் சிரிப்பினிலே, சிக்கி தவிக்கிறேன் கண்மனியே!
பத்தி பதிந்த பக்கங்களிலே வரிவரியாய் உன் முகமே!


- விஜய் தேசிங்

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...